தினமும் தலைக்கு குளித்தால் முடி கொட்டுமா? பலரின் குழப்பத்திற்கு பதில் இதோ

தினமும் தலைக்கு குளிப்பதால் முடிக்கு பிரச்சனை ஏற்படுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முடி உதிர்வு
இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விலை அதிகமான ஷாம்பு, எண்ணெய் இவற்றினை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
முடி உதிர்விற்கு பெரும்பாலும் தலையில் உள்ள பொடுகு முக்கிய காரணமாக அமைகின்றது. ஆனால் சிலர் அடிக்கடி தலைக்கு குளிப்பதால் முடிஉதிர்வு ஏற்படுவதாக கூறுகின்றனர்.
முடியை தினமும் அலசினால் முடி உதிர்வு ஏற்படுகின்றதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தலைமுடிக்கு ஷாம்பு போடுவதால் முடி உதிர்வு ஏற்படாது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
தலையில் சேரும் அதிகமான எண்ணெய், வியர்வை, இறந்த செல்கள் மற்றும் மாசு போன்றவற்றினை நீக்குவதற்கு தான் ஷாம்பு பயன்படுத்துகின்றனர்.
தலைமுடியை அலசுவதால் எண்ணெய், வியர்வை மற்றும் இறந்த செல்கள் நீக்கப்படுகின்றது. மேலும் பொடுகு, உச்சந்தலை எரிச்சலையும் கட்டுப்படுத்துகின்றது.
அடிக்கடி தலைக்கு ஷாம்பு போடுவதால் சில பிரச்சனைகளும் ஏற்படலாம். உச்சந்தலை மற்றும் முடி இழைகள் வறண்டு போகுதல். சுருட்டை முடி இருப்பவர்களுக்கு அதிகமான சிக்கல் ஏற்படும்.
கடுமையான ஷாம்புகள் எரிச்சலை அதிகரிப்பதுடன், நுனி முடியில் பிளவுகளையும், முடியை சேதப்படுத்தவும் செய்கின்றது. ஆதலால் முடியின் தரத்தைப் பொறுத்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டுமாம்.
Zinc pyrithione அல்லது Ketoconazole – பொடுகு கட்டுப்படுத்த சிறந்தது
Glycerin அல்லது Ceramides – வறண்ட தலைமுடிக்கு ஈரப்பதம் அளிக்கும்
pH balanced மைல்டு ஷாம்பு – தினசரி பயன்படுத்த ஏற்றது
ஸ்கால்ப் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், உச்சந்தலையில் அதிகமான எரிச்சல் உள்ளவர்கள், வலி பிரச்சனையை அனுபவிப்பவர்கள் மருத்துவரை அணுகவும்.
![]()