பலதும் பத்தும்

சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழைமையான கோவில்! எங்குள்ளது?

பொதுவாகவே வாழ்வில் பிரச்சனைகள், துன்பங்கள், கடன்கள் நீங்கி செல்வ செழிப்புடனும், நீண்ட ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் வாழ வேண்டும் என்பது தான் பெரும்பாலானவர்களின் பிராத்தனையாக இருக்கும். கோவிலுக்கு சென்றும் இவ்வாறு தான் வேண்டுதல்களை வைப்பார்கள்.

அந்தவகையில், சில கோவில்களுக்கு சென்றால்  குழந்தை பாக்கியம் கிடைக்கும், சில தளங்கள்  கடன் பிரச்சினைகளை நீக்கும், அது போல் சில கோவில்களுக்கு செல்வது பாவங்களை போக்கும் என்று நம்ப்படுகின்றது.

ஆனால் இந்தியாவில் அதுவும் தழிழகத்தை உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு சென்று,ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தால் சர்க்கரை நோய் அதாவது நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகும் என்றால் உங்களால் நம்பமுடுடிகின்றதா?

ஆம் அப்படிப்பட்ட அற்புதத்தை நிகழ்த்தும் சிவன் கோவில் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழைமையான கோவில்! எங்குள்ளது? | 1300 Year Old Diabetes Temple Of India Details

1300 ஆண்டுகள் பழைமையானதா?

தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருக்கருப்பூரில் இந்த சிவன் கொவில் அமைந்துள்ளது.இந்த கோவில் 1,300 ஆண்டுகள்பழமையானது என குறிப்பிடப்படுகின்றது. அதாவது சுமார் 4 யுகங்களாக இருப்பதாக ஸ்தல வரலாறு பறைசாற்றுகின்றது

இருப்பினும் புராணங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் இந்த திருக்கோயில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழைமையான கோவில்! எங்குள்ளது? | 1300 Year Old Diabetes Temple Of India Details

இங்குள்ள சிவபெருமான், ‘கருப்பஞ்சாற்றின் அதிபதி’ என்று கருதப்படுவதுடன் கரும்பேஸ்வர் என்ற நாமத்தினால் வணங்கப்படுகிறார். இந்த கோயில் சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இங்கு வந்து மனமுருகி வேண்டினால், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் அல்லது முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் காணப்படுகின்றது. 

இந்தியாவில் அமைந்துள்ள சிவன் கோயில்களிலேயே மிகவும் வித்தியாசமான ஒரு சிவ ஸ்தலம் தான் ஸ்ரீவெண்ணிக்கரும்பேஸ்வரர் திருக்கோயில். இந்த கோவிலில் அமைந்துள்ள சிவலிங்கமானது கரும்புகளை ஒன்றாக சேர்த்து கட்டி வைத்தததை போன்ற தோற்றத்தில் காணப்டுகின்றது.

சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழைமையான கோவில்! எங்குள்ளது? | 1300 Year Old Diabetes Temple Of India Details

இந்த கோவிலில் பிரபலமான சடங்குகளில் ஒன்று தான்  உணவை எறும்புகளுக்கும் சிறு பூச்சிகளுக்கும் கொடுப்பதாகும். எறும்புகள் தங்களின் பிரசாதத்தை சாப்பிட்டால்  தங்கள் காணிக்கைகள் சிவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நம்புகின்றார்கள்.

இதனால் தங்கள்  உடலில் சர்க்கரை நோயின் தீவிரம் குறைவதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். இக்கோயிலில், பக்தர்கள் எறும்புகளுக்கு சர்க்கரை மற்றும் ரவையை கலந்து உணவாக அளித்தபடி கோவிலை வலம் வருகிறார்கள்.இது இக்கோவிலில் முக்கிய வேண்டுதலாகவும் இருந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *