பலதும் பத்தும்

ஜேர்மனியில் விண்ணில் தோன்றிய வியப்பூட்டும் ஒளி

ஜேர்மனியில், வானில் வியப்பூட்டும் ஒளி ஒன்று தோன்றிய நிலையில், அதைத் தொடர்ந்து அரிய நிகழ்வொன்று நிகழ்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில், வானில் ஒளிப்பந்து ஒன்று வேகமாக கடந்து செல்வதை ஜேர்மனியின் பல்வேறு பகுதிகளில் வாழும் பலரும் கண்டுள்ளார்கள்.

அது உண்மையில் ஒரு விண்கல்!
அதைத் தொடர்ந்து, Koblenz என்னும் நகரில், வீடொன்றின் கூரையைத் துளைத்துக்கொண்டு அந்த வீட்டுக்குள் விழுந்துள்ளது அந்த விண்கல்லின் துண்டு ஒன்று.

தகவலறிந்து அதிகாரிகள் அந்த வீட்டுக்கு விரைந்த நிலையில், அந்த வீட்டின் கூரையில், கால்பந்து அளவுக்கு ஒரு துவாரம் விழுந்துள்ளதைக் கண்டுள்ளார்கள்.

அந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில், மத்திய கிழக்கில் ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்ந்துவரும் நிலையில், அது ஒரு ஏவுகணையாக இருக்குமோ என மக்களுக்கு சந்தேகம் ஏற்பட, அது ஏவுகணையோ வெடிகுண்டோ அல்ல என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *