சர்வதேசத்திடம் உதவி கோர அறிவிக்கப்பட்ட இலங்கையை கட்டியெழுப்பும் நிதியம் சட்டபூர்வமானதல்ல

டித்வா புயல், வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியம் ஒன்று ஜனாதிபதி செயலகத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேசத்துக்கு அறிவிக்கப்பட்டது.. அவ்வாறு ஒரு நிதியம் இல்லை என்று நான் கூறுகின்றேன் அப்படி சட்டத்தால் ஸ்தாபிக்கப்பட்ட நிதியம் ஒன்று இருந்தால் ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ஹர்ஷ டி சில்வா அரசுக்கு சவால் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமைஇடம் பெற்ற டித்வா புயலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சவால் விடுத்த அவர் மேலும் பேசுகையில்,
டித்வா புயல்,வெள்ள அனர்த்தத்தின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி செயலகத்தால் நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உண்டு. ஆகவே நிதி தொடர்பான நிதியங்கள் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தான் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.ஆகவே இந்த நிதியத்தை சட்டத்தால் நியமிக்க வேண்டும்.
இலங்கையை கட்டியெழுப்பும் நிதியம் ஒன்று ஜனாதிபதி செயலகத்தால் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேசத்திற்கு அறிவிக்கப்படுகின்றது .ஆனால் அவ்வாறான ஒரு நிதியம் நியமிக்கப்படவில்லை என்று நான் கூறுகின்றேன்.
சட்டத்தால் அவ்வாறான நிதியம் ஒன்று நியமிக்கப்பட்டிருந்தால் அதற்கான ஆவணங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கமுடியுமா? நாட்டில் கணக்காய்வாளர் நாயகம் தற்போது இல்லை ஆகவே அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் என்ற அடிப்படையிலேயே இதனைகே கூறுகின்றேன் என்றார்.
![]()