இலங்கை

பதுளை மாவட்டத்தின் பெரும் பகுதி புதையலாம்;  அமைச்சர் சமந்த வித்தியாரத்ன

பதுளை மாவட்டத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் கடந்த கால அறிக்கைகளின் படி 66.9 வீதப் பகுதிகள் மண் சரிவு அபாயத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தங்களின் அடிப்படையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தின் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் இது வரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.41 பேர் காணாமல் போயுள்ளனர்.அதிக மரணங்கள் மண் சரிவினால் ஏற்பட்டதாகும். 9 பேர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலைமை இன்று பிற்பகல் வேளையில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தற்காலிக பாதுகாப்பு மையங்கள் 102 ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 6,808 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளன. பலர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் பல வீதிகள் மண்சரிவால் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.பதுளை நகரம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

நேற்று(வெள்ளி) நகரத்தில் சில பகுதிகளில் இராணுவத்தினர் மீட்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

பதுளை-மஹியங்களை வீதி மூடப்பட்டுமையால் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பதுளை-மஹியங்களை வீதியில் மீட்பு நடவடிக்கைகளுக்கு 47 இராணுவத்தினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பல பகுதிகளில் சுத்தமான நீர் இல்லை.தண்ணீர் போத்தல்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. சிறிய பவுசர்கள் மூலம் நீரை விநியோக்க முடிவு செய்துள்ளோம்.

மீட்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *