இலங்கை

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை; 21 ஆம் தேதி நுகேகொடையில் ஒன்றுகூட அழைப்பு 

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு வந்து அரசாங்கத்திற்கு எதிரான தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இன்று, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. உருளைக்கிழங்கு விவசாயிகள், பூசணி விவசாயிகள் மற்றும் வெங்காய விவசாயிகளுக்கு செய்யப்பட்ட அநீதிக்கு அந்த மக்கள் அரசாங்கத்தை வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இப்போது அந்த மக்கள் வீதிகளில் இறங்கினர்.

அரசாங்கம் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய அநீதியைச் செய்துள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த அரசாங்கத்தின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பயப்படவில்லை.

அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட அனைத்துக் கட்சிகளும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எங்களுடன் சேர்ந்து அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *