முச்சந்தி
வெள்ளை மாளிகையை அதிர வைத்த நியூயார்க் புதிய மேயர் மம்தானியின் வெற்றி!… டிரம்ப் அரசுடன் இணைந்து பயணிப்பாரா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(நியூயோர்க்கின் முதலாவது முஸ்லிம் மேயராக இந்திய வம்சாவளியின மம்தானி தெரிவாகி உள்ளார். நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலப் பகுதியில் பதவியற்கும் மிகவும் வயது குறைந்தவராக இருக்கிறார். முன்பு மேயர் வேட்பாளராக ஜோஹ்ரான் மம்தானி இருந்த வேளையில் அவரின் முக்கிய பிரச்சாரங்களில் மோடி, நெத்தன்யாகுவை கைது செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்)அமெரிக்காவின் நியூயார்க் நகரின் 111வது மேயராக, 34 வயதே ஆன ஜோஹ்ரன் மம்தானி (Zohran Mamdani) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
முதல் இந்திய வம்சாவளி மேயர்:
அமெரிக்காவின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ள ஜோஹ்ரன் மம்தானி ஒக்ரோபர் 18, 1991 இல் உகண்டாவின் கம்பாலா நகரில் இந்திய – முஸ்லிம் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது ஏழாவது வயதிலேயே நியூயோர்க்கிற்குக் குடிபெயர்ந்தவர்.
இந்தியாவின் சினிமாத் திரைப்பட இயக்குநராகிய மீரா நாயரது (Mira Nair) மகனான மம்தானியின் தந்தையார் மஹ்மூட் மம்தானி (Mahmood Mamdani) கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியர்.இவ்வாறான புலம்பெயர் பின்னணி கொண்ட அவர் அமெரிக்காவின் மிக முக்கிய நபராக மாறியிருக்கிறார். ஆம் நியூயோர்க் பெருநகரத்தின் முதல்வர் பதவியை வென்று தனதாக்கியுள்ளார்.
நியூயோர்க் எப்போதும் புலம்பெயர்ந்தோரது நகரமாக இருந்து வருகிறது. அது புலம் பெயர்ந்தவர்களால் கட்டியெழுப்பப்பட்ட நகரம். புலம்பெயர்ந்தவர்களால் இயக்கப்படுகின்ற நகரம். இன்றிரவுடன் அது புலம்பெயர் வாசி ஒருவரது தலைமையின் கீழ் வந்துள்ள நகரம் என
தனது வெற்றி உரையில் பெருமையாகக் கூறியிருக்கிறார் ஜோஹ்ரன் மம்தானி.
8.5 மில்லியன் மக்கள் வசிக்கின்ற நியூயோர்க் நகரத்தின் மேயர் தேர்தல் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மம்டானியை நியூயோர்க் வாசிகள் தங்களது அடுத்த முதல்வராகத் தெரிவு செய்திருக்கின்றனர்.
அமெரிக்காவின் தீவிர இடதுசாரிகளிடையே மிகச் செல்வாக்கு மிக்க ஒர் அரசியல்வாதி மம்தானி. ஆயினும் அவர் ஒருநாள் நியூயோர்க் நகரத்தின் மேயராக வருவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. மிகச் சமீப காலத்தில் அறியப்பட்ட அரசியல் முகம்.
மம்தானியின் அதிரடியான வரவும், மம்தானியின் நியூயோர்க் அரசியல் பயணம் அமெரிக்கா தாண்டி முழு உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்ற மம்தானியின் வெற்றி வெள்ளை மாளிகையை அதிரவைத்துள்ளது.
அதிபர் ட்ரம்ப் தேர்தலுக்கு முன்பாக நியூயோர்க் நகருக்கு இராணுவத்தை அனுப்பி அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தீவிரமாக முயன்றிருந்தார். மம்டானியைக் கடுமையாகத் தாக்கிப் பேசிவந்தார். நியூயோர்கில் ஒரு கம்யூனிஸ்ட் வெல்வதை அனுமதிக்கப் போவதில்லை, அவரைக் கைது செய்வேன் என்றும் வெளிப்படையாகச் சூளுரைத்திருந்தார். இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே வேட்பாளராகிய மம்டானி தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ளார்.
இளம் வயதான மம்தானி அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமாகிய நியூயோர்க்கின்
வரலாற்றில் வயதில் மிக இளைய மேயராகப் பதவியேற்கிறார். அத்துடன்
வரலாற்றில் வயதில் மிக இளைய மேயராகப் பதவியேற்கிறார். அத்துடன்முதலாவது முஸ்லிம் பூர்வீக மேயர் என்ற சாதனையையையும் படைத்துள்ளார். தனது பல்கலைக்கழகக் கல்வியை பூர்த்திசெய்த பின்னர் 2018 இல்தான் அவர் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மம்தானியின் வெற்றியை வாழ்த்தி வரவேற்றிருக்கிறார்.
மோடி ஒரு போர்க் குற்றவாளி:
நரேந்திர மோடி முதல் இஸ்ரேல் வரை, ஜோஹ்ரான் மம்தானி பலரை வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார். அவரது குடும்பத்தினர் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். குஜராத்தின் முஸ்லிம்களை கொத்துக் கொத்தாகக் கொல்ல மோடி உதவினார். அங்கே அளவுக்கு அதிகமான வன்முறை நிலவியது. தற்போது குஜராத்தில் இஸ்லாமியர்களே இல்லை என்பது போன்ற ஒரு தோற்றம் நிலவுகிறது.
நாம் பெஞ்சமின் நெதன்யாகுவை பார்ப்பதைப் போன்றே, மோடியையும் பார்க்க வேண்டும். அவர் ஒரு போர்க் குற்றவாளி, என்று மம்தானி முன்பு கூறியிருந்தார்.
ஆனால் நியூயார்க்கில் இந்த விடயத்தில், சில இந்திய – அமெரிக்கர்கள், இந்துத்துவா குழுக்கள் அவரது கருத்தை வெறுப்பு கொண்ட, பிரிவினையை ஏற்படுத்தும் கருத்து என்று விமர்சித்தனர். மம்தானி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
நெத்தின்யாகு வந்தால் கைது:
நியூயோர்க்குக்கு இஸ்ரேலிய பிரதமர் நெத்தின்யாகு வந்தால் கைது செய்வேன் எனவும் சூளுரைத்துள்ளார். அது மட்டுமல்ல இந்திய பிரதமர் மோடியை தனது நகரம் வரவேற்காது. குஜாராத்தில் இஸ்லாமியர்கள் படுகொலைக்கு மோடியே காரணம்
எனவும் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
ஜோஹ்ரான் சியோனிசவாதிகள் மீது காட்டமான விமர்சனம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நியாயத்தை கதைத்தால் வாக்கு கிடையாது என்று ஒதுங்கும் அரசியல் தலைமைகள் தங்கள் ஒவ்வாமையை வெளிக்காட்டத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவின் அதிகாரத்துவ கோட்டைக்குள்ளேயே சிறு புரட்சி நடக்கிறது என்றால் மிகையாகாது.அத்துடன் பாலஸ்தீன விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மை தலைவர்களிடம் இருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கிறார் மம்தானி. அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலை தொடர்ந்து எதிர்த்தும்-விமர்சித்தும் வருகிறார்.
அமெரிக்க தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், இஸ்ரேல் ஒரு யூத நாடாக இருப்பதை அவர் எதிர்த்தார். “மதம் மற்றும் இதர கூறுகளின் அடிப்படையில் குடியுரிமை பிரிக்கப்படும் எந்த ஒரு நாட்டையும் நான் ஆதரிக்க மாட்டேன். அனைத்து நாடுகளிலும் சமத்துவம் நிலவ வேண்டும். இதுதான் என் நம்பிக்கை,” என்று அவர் கூறியுள்ளார்.
பாலஸ்தீனர்களின் சர்ச்சைக்குரிய ‘க்ளோபலைஸ் தி இண்டிஃபாதா (Globalise the Intifada)” என்ற முழக்கத்தில் இருந்து அவர் விலகி நிற்கவில்லை. இண்டிஃபதா என்பது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற பாலஸ்தீன போராட்டங்களைக் குறிப்பிடும் சொற்றொடர் ஆகும்.
இது தொடர்பாகப் பேசிய அவர் “இந்த முழக்கம் மனித உரிமைகளுக்கான பாலஸ்தீன மக்களுடைய போராட்டத்தின் அடையாளம்” என்றும் கூறியுள்ளார். “இது சமத்துவத்திற்கான குரல். வன்முறைக்கான குரல் இல்லை” என்றும் அவர் கருதுகிறார்.
ஆனால் அவரது கருத்தை விமர்சிக்கும் பலரும், இந்த முழக்கம் சர்வதேச அளவிலான வன்முறைக்கு வழி வகுக்கிறது. இது யூத வாக்காளார்கள் மத்தியில் அச்சத்தைப் பரப்புகிறது என்று குறிப்பிடுகின்றனர்.
நியூயோர்க்கில் ஒரு புதிய சகாப்தம்:
நியூயோர்க் மாநில அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. முன்பு, சட்டமன்றத்தில் இடதுசாரிக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மிகச் சிலரே இருந்தனர். ஆனால் இப்போது, அவர்களின் எண்ணிக்கை மற்றும் செல்வாக்கு இரண்டும் கணிசமாக வளர்ந்துள்ளன.
மம்தானி போன்ற இளைஞர்கள் அரசின் உள்ளே இருந்துகொண்டே அதன் செயற்பாட்டு முறைமைகளை மாற்ற செயற்பட்டார்கள். மம்தானி ஒரு பாரம்பரிய அரசியல்வாதி அல்ல. ஒரு “வீட்டுவசதி ஆலோசகர்” (housing counselor) ஆக, நியூயோர்க்கின் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் வீட்டுவசதிப் பிரச்சினைகளை நேரடியாகக் கையாண்டவர். அந்த அனுபவம்தான் அவரது அரசியல் போராட்டத்தின் அடிப்படையாகும்.
வாடகை கொடுப்பதில் ஏற்படும் தாமதத்தால் வெளியேற்றப்படும் அபாயத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவியதால், அரசின் குறைபாடுகளை நேரில் கண்டவர் மம்தானி. வாடகைக் கட்டுப்பாடு” (Rent Control), “வீட்டுவசதி நீதிமன்றம்” (Housing Court) போன்ற சிக்கலான விடயங்களைப் பற்றிய நடைமுறை அறிவு அவருக்கு இருந்தது.
டிரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள்
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் தன்னை கம்யூனிஸ்டாக அடையாளப்படுத்திக் கொண்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரான மம்தானியை, அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்ததோடு வாக்காளர்களையும் எச்சரித்தார்.
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மம்தானி வெற்றி பெற்றால்,
நியுயார்க் நகருக்கு மத்திய அரசின் நிதியை வழங்குவது சாத்தியமில்லை என அதிபர் குறிப்பிட்டு இருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், அதிபராக எனக்கு நியூயார்க்கிற்கு நிறைய பணம் கொடுப்பது கடினமாக இருக்கும் , ஏனென்றால் உங்களிடம் ஒரு கம்யூனிஸ்ட் நியூயார்க்கை நடத்தினால், அங்கு அனுப்பப்படும் பணம் வீணாக்குவதற்கு சமமானது என குறிப்பிட்டார். ஆனால், இந்த எச்சரிக்கைகள் எதையும் பொருட்படுத்தாமல் நியூயார்க் மக்கள் மம்தானிக்கு வாக்களித்து அடுத்த மேயராக்கியுள்ளனர்.
நியுயார்க் நகருக்கு மத்திய அரசின் நிதியை வழங்குவது சாத்தியமில்லை என அதிபர் குறிப்பிட்டு இருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், அதிபராக எனக்கு நியூயார்க்கிற்கு நிறைய பணம் கொடுப்பது கடினமாக இருக்கும் , ஏனென்றால் உங்களிடம் ஒரு கம்யூனிஸ்ட் நியூயார்க்கை நடத்தினால், அங்கு அனுப்பப்படும் பணம் வீணாக்குவதற்கு சமமானது என குறிப்பிட்டார். ஆனால், இந்த எச்சரிக்கைகள் எதையும் பொருட்படுத்தாமல் நியூயார்க் மக்கள் மம்தானிக்கு வாக்களித்து அடுத்த மேயராக்கியுள்ளனர்.டிரம்புக்கு பின்னடைவு:
இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்ற பிறகு, டிரம்ப் தன்னிச்சையாக பல அதிரடி முடிவுகளை வெளியிட்டு வருவது குடியரசு கட்சியிலேயே இரண்டாக உடைத்துள்ளது. அவரது பிற்போக்குத்தனமான முடிவுகளை ஒரு தரப்பினர் ஆதரிக்க, மற்றொரு தரப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்களும் இதே மனநிலையில் தான் உள்ளனர். இந்த சூழலில் மம்தானியின் வெற்றி ஜனநாயகக் கட்சியின் முற்போக்கான பிரிவுக்கு ஒரு முக்கிய உந்துகோலாக அமைந்துள்ளது.
தற்போது நியூயோர்க்கின் முதலாவது முஸ்லிம் மேயராக இந்திய வம்சாவளியின மம்தானி பதவி ஏற்றுள்ளார். நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலப் பகுதியில் பதவியற்கும் மிகம் வயது குறைந்தவராகப் பதிவு ஏற்கிறமை குறிப்பிடத்தக்கது.
![]()