முச்சந்தி

மாகாண சபைத் தேர்தல்; ஜனாதிபதி நழுவுகிறார்; ரவூப் ஹக்கீம் எம்.பி.

மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதில் இருந்து நழுவல் போக்கிலேயே ஜனாதிபதி செயற்படுகிறார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வரவுசெலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

மாகாண சபைகள் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அதற்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. கட்சித் தலைவர்கள் கூடி முடிவெடுத்தால் தேர்தலை நடத்த தாயார் என்றும் கூறுகின்றார். இது மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதில் நழுவல் போக்கிலேயே அமைகிறது . இவ்விடயத்தில் அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டும். தேர்தல் நடத்த அரசாங்கம் தீர்மானித்தால் அதற்கு முழு ஆதரவு வழங்க நாங்கள் தாயார் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *