கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பின்னால் ஐவர் உள்ளனர்!; இஷாரா செவ்வந்தி தெரிவிப்பு

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரின் படுகொலை தொடர்பாக, கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டபின் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கணேமுல்ல சஞ்சீவின் கொலையில் 5 பேர் மூலமாக செயற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் முக்கியமாக கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்து, தருன், பிரதான துப்பாக்கிதாரி மற்றும் இஷாரா செவ்வந்தி ஆகிய ஐவரும் பிரதானதமாக செயற்பட்டுள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
மேலும், இஷாரா செவ்வந்தியின்ட தாயாரின் இறுதி சடங்கை காணொளி எடுத்து அவருக்கு அனுப்பிய இஷாரா செவ்வந்தியின் மாமா தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போது இஷாரா செவ்வந்தியின் மாமா தொடர்பான விசாரணைகளும் நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள விசாரணைகளில் பெறப்பட்டுள்ளன.
![]()