முச்சந்தி
ஆப்கானில் மீண்டும் அமெரிக்கா தலையீடு… பக்ராம் ராணுவத்தளத்தின் முக்கியத்துவம் என்ன?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

( கடந்த இருபது ஆண்டுகளில் ஜோர்ஜ் புஷ், பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் டிரம்ப் என மூன்று அமெரிக்க அதிபர்கள் இந்த ராணுவ தளத்திற்கு வருகை தந்ததிலிருந்தே இந்த ராணுவத் தளத்தின் முக்கியத்துவத்தை அறியலாம். மேலும் ஜோ பைடன் 2011இல் பக்ராம் விமான நிலையத்திற்குச் சென்றார். ஆனால் அப்போது அவர் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்தார்.அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் அணுசக்தி திட்டம் தொடர்பாக பதற்றம் உச்சத்தில் உள்ள ஈரானில் இருந்து இந்த விமான தளத்தின் வான் வழி தூரமும் சுமார் 1644 கிலோமீட்டர் ஆகும். அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தற்போது உச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது)
2021இல் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபன் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் தற்போது பக்ராம் ( Bagram )விமானத் தளத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கோரி வருகிறது.
பக்ராம் தளத்தை குறிவைக்கும் அமெரிக்கா:
பக்ராமை தளத்தை திரும்ப பெற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மறுக்கிறீர்களா, என அண்மையில் ஓர் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் பதிலளித்துள்ளார். அதைப் பற்றி நாங்கள் பேசமாட்டோம். ஆனால் இப்போது ஆப்கானிஸ்தானுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். பக்ராம் விமான தளத்தை உடனே திரும்பப் பெற விரும்புகிறோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பக்ராம் ராணுவ தளம் முதன்முதலாக 1950களில் சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்டது. ஆப்கான் மீது அது படையெடுத்த போது தனது வான் வழி தாக்குதலுக்காகப் பயன்படுத்தி வந்தது.
பின்னர் 2001 ஆம் ஆண்டு ஆப்கான் மீது அமெரிக்க படையெடுத்த போது, அது தனது ராணுவ கோட்டையாக மாற்றிக் கொண்டது.ஆப்கானின் மையப்பகுதியான, தலைநகர் காபூலின் புறநகரில் அமைந்துள்ள இந்த ராணுவ தளம் மீதுதான் மீண்டும் அமெரிக்கா தன் கண்ணை வைத்துள்ளது. இருபது சதுர கிலோமீட்டர் (சுமார் 5,000 ஏக்கர்) பரப்பளவில் மிகப்பெரிய தளமாக அமைந்துள்ளது. இதில் இரண்டு ஓடுபாதைகள் உள்ளன. மிகவும் நவீன ஓடுபாதை 3.5 கிமீ நீளம் கொண்டது. இதில் ராட்சத விமானங்களை (B-52 மற்றும் C-5) தரையிறங்க முடியுமாக உள்ளது.
அமெரிக்கா ஏன் பக்ராம் மீது கண் ?
பக்ராம் திறம்பட அமைக்கப்பட்ட தளம் என்பதாலும், மென்மேலும் விரிவாக்கக் வல்லது என்பதாலும் பென்டகனின் கண் அதன் மீது உள்ளது என்பதில் ஆச்சரியம் இல்லை. பக்ராமின் பின்வரும் கேந்திர முக்கியத்துவங்கள் காரணமாக பென்டகனுக்கு அதன் மீது தனது ஆக்கிரமிப்புக் கால்களை வைக்க தீவிரமான ஆசை உள்ளது. மேற்கிலிருந்து ஈரானை கண்காணிக்க முடியும். மேலும் தெற்கிலிருந்து பாகிஸ்தானை கண்காணிக்க முடியும்.
இதே வேளை கிழக்கிலிருந்து சீனாவை கண்காணிக்கவும் இலகுவாக முடியும்.
அத்துடன் வடக்கிலிருந்து ரஷ்யாவை கண்காணிக்க வேண்டும் என்றால் இத்தளம் தேவை என்பதை அமெரிக்க கவனத்தில் கொண்டுள்ளது.
பக்ராம் தளம் வெறும் ராணுவ முகாம் மட்டுமல்ல. மாறாக முழு மத்திய ஆசியாவையும் ஒரே பார்வையில் கட்டுப்படுத்துவதற்கான நுழைவாயிலாகும்.
அதாவது பெண்டகன், பக்ராம் விமானப்படை தளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால்
ஆப்கானிஸ்தானை மட்டுமல்ல, பாதி கிழக்குலகை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என்பது அதற்கு நன்கு தெரியும்.
அதிநவீன ஆயுதங்களை கையாளும் வசதி, நவீனக் கட்டுப்பாட்டு கோபுரம், ஐம்பது படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை, சுரங்க பாதை உள்ளிட்டவற்றை இந்தப் பக்ராம் விமான தளம் கொண்டுள்ளது. இப்பகுதியில் சிறைச்சாலையும் உள்ள நிலையில், முந்தைய காலங்களில் இங்குதான் தாலிபன் மற்றும் அல் கொய்தா அமைப்பை சேர்ந்த முக்கிய கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
விட்டுதர மறுக்கும் ஆப்கான் :
ஆப்கானிஸ்தானின் முக்கிய விமான தளமான பக்ராமை கைப்பற்ற அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால், அந்த விமான தளத்தை விட்டுக்கொடுக்க முடியாது எனத் தலிபான் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாகிர் ஜலால், அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானும்
பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகள் மீண்டும் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆப்கான் அரசு பக்ராம் விமான தளத்தை விட்டுதர முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்துவிள்ளது.
பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகள் மீண்டும் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆப்கான் அரசு பக்ராம் விமான தளத்தை விட்டுதர முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்துவிள்ளது.ஆசியாவில் தனது துருப்புகளை மீண்டும் நிலை நிறுத்தவும், சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் இந்த விமான தளம் அத்தியாவசியமானது என அமெரிக்கா கருதுகிறது. எனவே, என்ன விலைக் கொடுத்தேனும் பக்ராம் தளத்தைக் கைப்பற்றும் முடிவில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
பக்ராம் ராணுவத்தள முக்கியத்துவம்:
இந்நிலையில், பக்ராம் தளத்தின் முக்கியத்துவம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தளத்தில் பிரமாண்டமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகள் உள்ளன. அத்துடன் உயர்ரக விமானம் மற்றும் வாகன பராமரிப்பு வசதிகள் உள்ளன.
ஆப்கானிலேயே அமையப்பெற்ற மிகப்பெரியதாக இராணுவ மருத்துவமனையை கொண்டுள்ளது. மேலும் உயர் தர தொடர்பாடல் மற்றும் உளவுத்துறை நிலையங்கள் உள்ளன.

பல ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. 20,000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் பணியாளர்களை தங்க வைக்கும் வீட்டு வசதிகள் உள்ளன. அங்கு முன்னர் CIA ஆல் நடத்தப்பட்ட ரகசிய சிறைச்சாலைகள் உள்ளன. இந்த பாதுகாப்பு மையத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள், சிறப்பு ராணுவ நடவடிக்கைகளுக்கான தளங்கள் உள்ளன.
அமெரிக்கா ஆப்கானை விட்டுச் சென்ற ஆயுதங்களும் இராணுவ தளவாடங்களும் இங்கு உள்ளன. பாரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் ராணுவ வாகனங்கள், உளவு மற்றும் ட்ரோன் விமானங்களும் உள்ளன.
மேம்பட்ட மின்னணு மற்றும் உளவு உபகரணங்கள், மற்றும் ராடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள், பாரிய மின் உற்பத்தி நிலையங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்,
ராணுவ சுரங்கப்பாதையுடன் வலையமைப்புகள் மற்றும் நிலத்தடி கோட்டைகள் ஆகியனவும் உள்ளன.
சீனாவிற்கு அருகாமையில்:
இத்தனைக்கும் மேலாகச் சீன அணுசக்தி நிலையங்களுக்கு அருகாமையில் பக்ராம் விமான தளம் அமைந்துள்ளது. கடைசியாகக் கூறப்பட்ட இந்தக் காரணம்தான், இந்தப் பகுதியின் மீது அமெரிக்காவின் பார்வையை ஈர்த்துள்ளது.
2001ம் ஆண்டு நடத்தப்பட்ட இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானுக்குள் நுழைத்த அமெரிக்க ராணுவம், அங்கு தனது துருப்புகளை நிறுத்தி வைத்தது. ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகும்கூட அமெரிக்கத் துருப்புகள் ஆப்கானிஸ்தானை விட்டு வௌியேறவில்லை. இந்த விமான தளம் அண்மைக் காலம் வரை, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது.
இந்நிலையில், ராணுவ செலவு உள்ளிட்ட சில காரணங்களால் 2021ம் ஆண்டு அமெரிக்கத்
துருப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. அப்போது, பக்ராம் விமான தளத்தில் இருந்தும் அமெரிக்க ராணுவம் வெளியேறியது. அந்தச் சமயத்தில் அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் இருந்தார்.
துருப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. அப்போது, பக்ராம் விமான தளத்தில் இருந்தும் அமெரிக்க ராணுவம் வெளியேறியது. அந்தச் சமயத்தில் அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் இருந்தார்.பக்ராம் விமான தளத்தைத் தாலிபான்களிடம் விட்டுக்கொடுத்த பைடனின் நடவடிக்கைக்கு தற்போதய அதிபர் டிரம்ப் தொடக்கம் முதலே அதிருப்தி தெரிவித்து வந்தார். இந்நிலையில், அந்த விமான தளத்தை அமெரிக்கா மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என அவர் வெளிப்படையாகவே தெரிவிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த பக்ராம் விமான தளம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது எனக் கூறினார். இந்தத் தளம் மேற்கு சீனாவிற்கு அருகாமையில் உள்ளதால், அதனை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், சீனா தனது அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் இடத்திலிருந்து ஒரு மணிநேரத் தொலைவில்தான் பக்ராம் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
![]()