உலகம்

கட்டார் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும்

பிற நாடுகளின் தாக்குதலில் இருந்து கட்டாரை பாதுகாக்கும் உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்துள்ளார்

அதற்கமைய, கட்டார் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவர்களை குறிவைத்து கட்டாரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால், அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது, காசாவில் பாதுகாப்பு ஏற்படுத்துவது குறித்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

அப்போது, தொலைபேசி வாயிலாக பெஞ்சமின் நெதன்யாகுவை, தொலைபேசி மூலம் கட்டார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் பேச வைத்தார்.

அப்போது கட்டார் மீது நடந்த தாக்குதலுக்கு அவரிடம் இஸ்ரேல் பிரதமர் மன்னிப்பு கோரினார். இதனிடையே மற்ற நாடுகளின் தாக்குதலில் இருந்து கட்டாரை பாதுகாப்புது தொடர்பான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அதற்கமைய, கட்டாரின் உள்கட்டமைப்பு, இறையாண்மை, பிராந்தியம் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவின் பாதுகாப்பு அல்லது அமைதி மீதான தாக்குதலாகவே அமெரிக்கா கருதும்.

அத்தகைய தாக்குதல் நடந்தால், கட்டாரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு தூதரக ரீதியில், பொருளாதார ரீதியிலும், தேவைப்பட்டால், ராணுவ ரீதியிலும் அமெரிக்கா பதிலடி கொடுக்கும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *