பலதும் பத்தும்

ஹெலிகாப்டரில் ஷாப்பிங் சென்ற 69 வயது முதியவர் ; வைரலாகும் வித்தியாசமான சம்பவம்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், சாலைப் பயணத்தைத் தவிர்ப்பதற்காக 69 வயது முதியவர் ஒருவர் தனது சொந்த ஹெலிகாப்டரில் ஷாப்பிங் செய்ய வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்கான்சின் மாகாணத்தின் ரோன்ஸ்டேல் பகுதியைச் சேர்ந்த லெராய் கான்ஸ் (69) என்பவர், ரிட்ச்பீல்ட் பகுதியில் உள்ள பிரபல விளையாட்டு மற்றும் வெளிப்புற உபகரணங்கள் விற்பனை நிலையமான கபெலாஸ் கடைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஹெலிகாப்டரில் ஷாப்பிங் சென்ற 69 வயது முதியவர் ; வைரலாகும் வித்தியாசமான சம்பவம் | 69 Year Old Man Goes Shopping Helicopter Viral

அங்கு காரில் பயணித்தால் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் ஆகும் என்பதால், அவர் தனது சொந்த ஹெலிகாப்டரில் செல்ல முடிவு செய்துள்ளார்.

இதன்படி, ஹெலிகாப்டரில் சென்ற அவர், கடையின் பார்க்கிங் பகுதியில் அதனை பாதுகாப்பாக தரையிறக்கிவிட்டு ஷாப்பிங் செய்யச் சென்றுள்ளார்.

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திடீரென ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாஷிங்டன் கவுண்டி பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணைகளில், லெராய் கான்ஸ் முறையான விமான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதும், அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைவாகவே ஹெலிகாப்டரை தரையிறக்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் எந்தவொரு விதிமீறலிலும் ஈடுபடவில்லை என உறுதி செய்யப்பட்டதால், அவர் மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

காரில் செல்வதைத் தவிர்ப்பதற்காக சொந்த ஹெலிகாப்டரில் ஷாப்பிங் சென்ற 69 வயது முதியவரின் இந்த வித்தியாசமான செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button