பலதும் பத்தும்

11 கோடி ரூபாயை குப்பையில் வீசிய பெண்

உலகமெங்கும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் இருக்கிறது. ஏனெனில் அதிர்ஷ்டம் நமக்கு அடித்து நாம் லட்சாதிபதியாகவோ, கோடீஸ்வரனாகவோ மாறிவிடமாட்டோமோ என்கிற ஆசையும் எதிர்பார்ப்புமே இதற்கு காரணம்.

இந்நிலையில்தான், தெற்கு இத்தாலியில் 11 கோடி விழுந்த லாட்டரி சீட்டை ஒரு பெண் தெரியாமல் குப்பையில் விசிய சம்பவம் நடந்திருக்கிறது.

சமீபத்தில் ஒரு பெண் லாட்டரி சீட்டை வாங்கியிருக்கிறார். அதன்பின் தெரியாமல் அந்த லாட்டர் சீட்டை குப்பையில் போட்டுவிட்டார்.

தினமும் வீட்டின் முன்பு குப்பை எடுத்து செல்பவர்கள் அதை எடுத்து சென்றுவிட்டனர்.

அவர் தூக்கி எறிந்த அந்த லாட்டரி சீட்டுக்கு 11 கோடி லாட்டரி விழுந்துவிட்டது.

குப்பைகளை எடுக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இரண்டு நாட்களாக தேடி அந்த லாட்டரி சீட்டை ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டார்கள்.

தேடுவதற்கான மொத்த செலவையும் அந்த பெண் ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button