இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஸ்தாபக உறுப்பினர் சின்னத்தம்பி துரைசிங்கம் அவர்கள் மறைந்தார்; நிதியத்தின் ஆழ்ந்த இரங்கல்


அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்ட காலமாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஸ்தாபக உறுப்பினரும், சிறந்த தன்னார்வத் தொண்டருமான சின்னத்தம்பி துரைசிங்கம் அவர்கள் அண்மையில் மறைந்த செய்தி அறிந்து, கல்வி நிதியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
கல்வி நிதியம் தொடங்கப்பட்ட காலத்தில், துரைசிங்கம் அவர்கள், சிட்னியிலிருந்து பல வழிகளிலும் பேராதரவு வழங்கினார்.
குறிப்பாக சிட்னி தமிழ் மனித உரிமை அமைப்பின் ஊடாக அவர் வழங்கிய நிதியுதவி, நிதியத்தின் நிரந்தர வைப்பிலிடப்பட்டு, அதன் மூலமும் இலங்கையில் முன்னர் நீடித்த போரில், குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கப்பட்டது.
மெல்பனிலும், சிட்னியிலும் முன்னர் நடைபெற்ற கல்வி நிதியத்தின் தகவல் அமர்வுகளிலும் அவர் கலந்துகொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தகுந்தது.
அன்னாரின் மறைவு கல்வி நிதியத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கல்வி நிதியத்தின் மூலம் ஆதரவுபெற்ற மாணவர்கள் சார்பிலும், கல்வி நிதியத்தின் உறுப்பினர்கள் சார்பிலும், கல்வி நிதியம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றது.
![]()