முச்சந்தி

சமூக வலைத்தளங்கள்; அரசின் கிடுக்கிப் பிடிக்குள் வருகிறது; சட்டத் திருத்தமும் வருகிறது 

வெறுப்புப் பேச்சுக்கள், இன முறுகலை,கும்பல் வன்முறைகளை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடும் சமூக ஊடகத் தளங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.. சமூக வலைத்தளங்களை முறையான வழிமுறையுடன் கண்காணிக்க வெகுவிரைவில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் அரச தரப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

சமூக ஊடகத் தளங்களில் பரப்பப்படும்,குறிப்பாக .இலங்கையில் இன முறுகலை அல்லது கும்பல் வன்முறைகளைத் தூண்டும் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களின் உள்ளடக்கங்கல்கள் பரப்புதலை கண்காணித்துக் கட்டுப்படுத்துவதற்காக 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினி குற்றச்செயல்கள் சட்டத்தின் 6 ஆம் பிரிவின் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்தகைய ஆபத்தான உள்ளடக்கங்களைப் பரப்புவதைத் தடுப்பதற்காகச் சமூக ஊடக நிறுவனங்களுடனும் தொலைத்தொடர்புச் சேவை வழங்குநர்களுடனும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்கீட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு தண்டனைச் சட்டக்கோவை 20(120) ஆம் உறுப்புரையின் 6 ஆம் பிரிவின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு சொலிசிஸ்டர் ஜெனரல் விராஜ் ஜயரத்ன தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, டிஜிட்டல் அபிவிருத்தி அமைச்சு மற்றும் நீதியமைச்சு ஆகிய பிரதான அமைச்சுக்கள் கூட்டாக இணைந்து செயற்படுகின்றன.

சமூக கட்டமைப்பில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகத் தளங்களில் பரப்பப்படும் செய்திகள் மற்றும் கருத்துக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த சமூக ஊடக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *