போதைப் பொருட்கள் மீட்பு தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஏன் வாய் திறப்பதில்லை?

மற்றைய விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாட்டில் மீட்கப்படும் போதைப் பொருட்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பாமல் இருப்பது தொடர்பில் சந்தேகங்கள் நிலவுவதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஏற்றுமதிகள், இறக்குமதிகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தாம் விரும்பியவற்றை கேட்பதற்காக உரிமைகள் உள்ளன. ஆனால் மற்றைய எல்லா விடயங்கள் தொடர்பில் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏன் போதைப் பொருள், ஐஸ் தொடர்பில் நிலயைியல் கட்டளைகளின் கீழ் கேள்வியெழுப்புவதில்லை.
நாங்கள் செய்த வேலைகளுக்காக ஊடக கண்காட்சிகளை நடத்தினால் பொலிவூட்டையே வாடகைக்கு எடுக்க வேண்டி வரும். நாங்கள் அவ்வாறு செய்வதில்லை. செய்வதில் ஒரு வீதத்தையும் கூறவில்லை. ஏன் இவர்கள் போதைப் பொருட்கள் தொடர்பில் கேட்பதில்லை.
நாங்கள் மக்களை ஏமாற்றுவதாக கூறுகின்றனர். நாங்கள் இந்தோனேசியா போன்ற இடங்களுக்கு சென்று கைது செய்வது ஊடக கண்காட்சியா? சம்பத் மனம்பேரி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக இருந்துள்ளார். ஏன் பொதுஜன பெரமுன அதுபற்றி கூறுவதில்லை. நாங்கள் முன்னெடுப்பது ஊடக கண்காட்சி அல்ல. ஐநாவிலும் ஊழலுக்கு எதிராக போடுவதாகவே கூறியுள்ளோம். நாங்கள் உலகத்திற்கு சென்று பொய்களை கூற முடியாது. எங்களின் கெள்கை பிரகடத்தில் கூறப்பட்டுள்ளதை செய்வோம். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன், ஜனநாயகத்தையும் கட்டியெழுப்புவோம் என்றார்.
![]()