கைது குறித்து ரணில் மௌனம் கலைத்தார்

கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக இந்த சம்பவம் குறித்துப் பேசியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 79வது ஆண்டு நிறைவு மாநாட்டில் உரையாற்றிய விக்கிரமசிங்க, தாம் கைது செய்யப்பட்ட நேரத்தில் ஒரு உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததாகக் கூறினார்.
”நான் கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற G77 கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன், அங்கு பல உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடினேன். அதன்பின்னர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவிற்குப் பயணம் செய்தேன்” என்று அவர் விளக்கமளித்தார்.
”இலங்கை திரும்பும் வழியில், நான் லண்டனில் ஒரு நாள் தங்கி இருந்தேன் (transit) இருந்தேன். அங்கு ஒரு இரவு தங்கியிருந்தேன், நான் அங்கு இருந்ததால் ஒரு உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்றுக்கொண்டேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தம்மை கைது செய்வதற்கு வழிவகுத்த புகார், தற்போதைய ஜனாதிபதியின் செயலாளரால் செய்யப்பட்டது என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
”எனக்கு எதிராக ஒரு புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், அது தற்போதைய ஜனாதிபதியின் செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் நான் அறிந்தேன். அதன் அடிப்படையில் நான் கைது செய்யப்பட்டேன். அந்த நேரத்தில், பலர் எனக்கு ஆதரவாகக் கூடினர், அவர்களுக்கும் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
தமது பதவிக்காலம் குறித்துப் பேசிய விக்கிரமசிங்க, “நான் 2022 இல் நாட்டைப் பொறுப்பேற்றபோது, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 76.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. நான் அதனை அனுர குமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்கும்போது, அது 98.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருந்தது. நான் 22 பில்லியன் டாலர்களை விட்டுச் சென்றேன். இந்தக் காரியங்களால் எனக்கு எந்த ஆதாயமும் இல்லை” என்று தெரிவித்தார்.
![]()