இலங்கை

சிறிதரன் எம்.பி.யின் கேள்வியால் சீற்றமடைந்த அமைச்சர் பிமல்; கேலியும் கிண்டலுமாக பதில்

யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், “எனக்கு உங்களைவிட சத்தமாகப் பேசத் தெரியும், நான் சொல்வதை கேளுங்கள்” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் கூறியமை சலசலப்பை ஏற்படுத்தியது

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது காணி விடுவிப்பு தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேட்ட கேள்வியால் சீற்றமடைந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,அவருக்கு பதிலளிக்கும் போதே கேலியும் கிண்டலுமாக பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல்,

“நாங்கள் காணி விடுவிப்பு மற்றும் காணி பிரச்சினைகளை அரசியல் இலாபத்திற்காக செய்யவில்லை. விடுவித்த காணிகளுக்கு நாங்கள் பெரும் விழாக்கள் எடுக்கவில்லை.முப்பது வருடங்கள் மூடிப்பட்டிருந்த வசாவிளான் வீதியை திறந்தோம். விழா எடுத்தோமா? அரசியல்வாதிகள் யாரும் வந்தார்களா?இராணுவத்தால் பிரதேச செயலாளருக்கே அதன் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இதில் இருக்கும் அரசியல் நோக்கமும் பார்வையும் நாங்கள் அறிவோம். இந்தக் காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்டதாகும். அதற்கான தேவைப்பாடு இன்று இல்லை என்றால் அக்காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவற்றுக்கு விழா அவசியமில்லை. நாங்கள் சொல்லாவிட்டாலும் சிலர், தங்களால் தான் காணிகள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

வடக்கு மக்கள் எங்களுக்கே அதிகம் வாக்களித்துள்ளனர். உங்களை விட எமக்கே இந்த மக்கள் தொடர்பில் அதிகமான பொறுப்புள்ளது. ஆதலால் நாம் அதற்காக வேலை செய்கிறோம்.

பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான சாதாரண படிமுறை ஒன்றுள்ளது. அதை பின்பற்றுங்கள். அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் நாற்பது வருடங்களாக தங்கள் காணிகளில் ஒரு பனை மரத்தை நாட்டுவதற்காக காத்திருக்கின்றனர். வடக்கில் 25 வருடங்களுக்கு பின்னர் நாம் அபிவிருத்திகளை செய்கிறோம்.

காணிகளை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எமக்கில்லை. உங்கள் அனைவரின் ஆலோசனைகளை பெற்றே செயற்திட்டங்களை செயற்படுத்த உள்ளளோம். நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்ய முடியாது.சில நடைமுறைகள் இருப்பதால், அதை பின்னபற்றியே செயற்பட வேண்டியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *