இலங்கை

சர்வதேச பொறுப்புக் கூறலுடன் இனப் படுகொலைக்கு நீதி கோரி ஜெனீவாவில் பாரிய பேரணி

இலங்கையின் இனப் படுகொலைக்கு நீதி மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை முன்வைத்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில்  ஒரு பாரிய பேரணி நடைபெற்றது.

ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் தேசத்திற்கு எதிராக இனப்படுகொலையை நடத்தியதற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான தமிழர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வெளியில் கூடி இந்த பேரணியை நடத்தியுள்ளனர்.

முன்னதாக, தியாக தீபம் திலீபன் சாகும் வரை உணவுத்தவிர்ப்பை மேற்கொண்டு 38 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பேரணியில் பங்கேற்றோர், அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *