முச்சந்தி

தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்தில் புதிய பொது நூலகம் திறப்பு

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் யாழ்ப்பாண தகவல் அலுவலகத்தில் புதிய பொது நூலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

​ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இந்த நூலகத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.

​இந்த நூலகத்தில், பொதுவுடைமை, சோசலிசம், மொழியியல், வரலாறு, அரசியல் விஞ்ஞானம், சமூகவியல், புவியியல், மருத்துவம், பொறியியல், விவசாயம், கலாசாரம், முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, ஆன்மிகம், உளவியல், கல்வி, சூழலியல், தூய மற்றும் பிரயோக விஞ்ஞானங்கள், தர்க்கம், புள்ளிவிபரம், கணிதம், கலை, பொருளாதாரம், ஊடகவியல், தத்துவம், கைத்தொழில், மற்றும் கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 2,000 புத்தகங்கள் உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button