இலங்கை

அடுத்த இலக்கு சஜித்தா?; விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தகவல்

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொது நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே அவர் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாச அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தை அபிவிருத்தி செய்வதற்காக பொது நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தும் மற்றும் வேறு சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அடிப்படையாகக் கொண்டு அவர் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதுவரையில் அவ்வாறான அழைப்பு எதுவும் வரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *