இலங்கை
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சிறையில்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சேனாரத்ன, கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அப்போது, கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம, இன்று காலை 9.00 மணிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன் வாக்குமூலம் அளிப்பதற்காக அவரை ஆஜர்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
![]()