முச்சந்தி
செம்மணி புதைகுழி விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை – வெளிவிவகார அமைச்சர் உறுதி

செம்மணி புதைகுழி விவகாரம் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், அதில் அரசாங்கம் எந்தவித தலையீடும் செய்யவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜய ஹேரத் தெரிவித்துள்ளார்.
மன்னார் மற்றும் மாத்தளை ஆகிய இடங்களிலும் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும், அந்த இடங்களை அகழ்ந்து ஆராய்வதற்குத் தேவையான முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த விடயங்களில் அரசாங்கம் வெளிப்படையாகச் செயற்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
![]()