உலகம்

ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன – ட்ரம்ப்

ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் அமெரிக்க இராணுவத் தாக்குதல்களால் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 03 முக்கிய அணு நிலையங்களில் சேதங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளது என்றும் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அமெரிக்க தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டம் சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் இந்த தவகல்களை ட்ரம்ப் மறுத்துள்ளார்.

ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்று வெளியான தகவல் போலியானது என ட்ரம்ப் தனது ட்ருத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதெனவும் அமெரிக்காவின் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் போலியான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் நீடித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *