உலகம்

கட்டார் மீது தாக்குதல் – ஈரானுக்கு நன்றி தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

கட்டார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முன்கூட்டியே அறிவித்தமைக்கு ஈரானுக்கு நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஈரான் நேற்று இரவு ஏவுகணை தாக்கதலை நடத்தியிருந்தது.

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள டிரம்ப்பு, ஈரானிய பதிலடியை ‘மிகவும் பலவீனமானது’ என்றும், எனினும், ‘முன்கூட்டிய அறிவிப்புக்கு’ நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் பதில் தாக்குதல் “மிகவும் பலவீனமானது” என்று டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். “எங்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கியதற்கு” அவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“ஈரானின் அணுசக்தி நிலையங்களை நாங்கள் அழித்ததற்கு ஈரான் அதிகாரப்பூர்வமாக மிகவும் பலவீனமான பதிலைக் கொடுத்துள்ளது, அதை நாங்கள் எதிர்பார்த்தோம், மேலும் மிகவும் திறம்பட எதிர்கொண்டோம்,” என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரூத் சோஷியலில் தெரிவித்துள்ளார்.

ஈரான் 14 ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றில் 13 ஏவுகணைகள் “சுட்டு வீழ்த்தப்பட்டன” என்றும், மற்றொன்று “அச்சுறுத்தப்படாத திசையில்” சென்றதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் எந்த அமெரிக்கர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, “எந்த சேதமும் ஏற்படவில்லை” என்றும், கத்தார் நாட்டினர் யாரும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டிய அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

“ஒருவேளை ஈரான் இப்போது பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறக்கூடும், இஸ்ரேலும் அவ்வாறே செய்ய உற்சாகமாக ஊக்குவிப்பேன்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *