இப்போதுதான் எங்களின் போர் தொடங்குகிறது!; ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அறிவிப்பு

ஈரானின் அணு சக்தி மையங்களை நேற்று அதிகாலை, முன்னறிவிப்பின்றி அமெரிக்கா அதிரடியாக தாக்கியிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “போர் இப்போதான் தொடங்கிருக்கிறது” என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்திருக்கிறது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் இதுவரை மிரட்டி வந்த அமெரிக்கா நேற்று நேரடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக இன்று ஈரானில் உள்ள நடான்ஸ், ஃபோர்டோ, இஸ்பஹான் அணு ஆய்வு கூடங்களில் அமெரிக்கா குண்டு மழை பொழிந்தது. இதில் அந்த அணுஆய்வு கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
“ஃபோர்டோ அணுசக்தி மையம் மீது தாக்குதல் நடக்கும் என்பது எங்களுக்கும் தெரியும். அந்த வகையில் இன்று(நேற்று)நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் பெரிய அளவுக்கான, திரும்பி வரமுடியாத பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை” என்று கூறியிருப்பதுடன் “போர் இப்போதான் தொடங்கிருக்கிறது” என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்திருக்கிறது.
இதேவேளை ஈரான் அமெரிக்க தளங்களைத் தாக்காமல், இஸ்ரேல் மீது மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தியது புத்திசாலித்தனமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பால், மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. குறிப்பாக மத்திய தரைக்கடல் மற்றம், செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் இராணுவ நிலைகள் குறி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
ஈரான் மீது குண்டுபோட வைத்து அமெரிக்காவை போருக்குள் இழுத்துவிட இஸ்ரேல் முயன்றது.. அதாவது ஈரானை அமெரிக்காவை விட்டு தாக்க வைத்தால் ஈரான் அமெரிக்காவை பதிலுக்கு தாக்கும். இதற்கு அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பதிலடி கொடுக்கும்.
ஈரானிய அணு நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, டெஹ்ரான் இஸ்ரேல் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிய தாக்குதல்களைத் தொடங்கியது. ஹைஃபா மற்றும் டெல் அவிவ் மீது ஈரான் இரண்டு கட்டங்களாக 27 ஏவுகணைகளை ஏவியதாகக் கூறப்படுகிறது. இதில் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர். டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் விமான நிலையத்தையும் குறிவைத்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த தாக்குதல் உலகப்போராக உருவெடுக்கும். அமெரிக்கா தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தலாம். இது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவிலும், போர்ச் சூழலிலும் ஒரு முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்பகுதியில் சுமார் 40,000 அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை அறிந்த அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். டிரம்ப் 8 அடி பாய்ந்தால் நாங்கள் 16 அடி பாய்வோம் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி கமெனி நிரூபிக்கும் விதமாக.. அமெரிக்காவின் தளவாடங்களை தாக்குவோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது. அமெரிக்க ராணுவ தளவாடங்களை தாக்குவதற்காக.. குறைந்த மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை ஈரான் தயார் நிலையில் வைத்துள்ளது. இதனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் உலகப் போராக தீவிரமடையக்கூடும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி நடந்தால் ஈரான் எளிதாக வீழ்ச்சி அடையும். இஸ்ரேல் அதிகம் போரில் ஈடுபடாமல், அமெரிக்காவை தனது கைக்கூலியாக பயன்படுத்தி ஈரானை வீழ்த்த முடியும். அமெரிக்காவின் படைகளை வைத்தே இஸ்ரேல் ஈரானை வீழ்த்த முடியும் என்று கனவு கண்டது.
ஆனால் ஈரான் அமெரிக்க தளங்களைத் தாக்காமல், இஸ்ரேல் மீது தனது முழு கவனத்தையும் செலுத்தியது புத்திசாலித்தனமான நகர்வாக பார்க்கப்படுகிறது. அதாவது ஸ்மார்ட்டாக செயல்பட்டு.. அமெரிக்க தளங்கள் எதையும் தாக்காமல், இஸ்ரேல் படைகளை மட்டுமே தாக்கி வருகிறது.
![]()