உலகம்

தாய்வானில் பறந்த சீன போர் விமானங்களால் பதற்றம்!

தாய்வான் எல்லையில் சீனாவுக்குச் சொந்தமான 74 போர் விமானங்கள் பறந்ததையடுத்து தாய்வானில் போர்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக தாய்வானை சீனாவுடன் இணைப்பதற்காக சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதுவேளை தாய்வானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதோடு மேலும் தாய்வான் எல்லைக்குள் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகிறது.

இதேவேளை, தாய்வான் வான்பரப்பில் பறந்த சீனாவின் 74 போர் விமானங்களில் 60 விமானங்கள் எல்லையைக் கடந்து தங்களது வான்பகுதியில் பறந்து சென்றதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சரகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *