இலங்கை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்..!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்டு யாழ் மாவட்ட பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 46 உறுப்பினர்கள் இன்றைய தினம்(09)  கொக்குவில் பொற்பதி சனசமூக நிலையத்தில் காலை 11 மணியளவில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

பிரதேச சபை மற்றும் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தமது சத்தியப் பிரமாண உரையாக ”கொடிய யுத்தத்தில் உயர் நீத்த பொதுமக்கள் சாட்சியாக! இவ் மண்ணின் விடுதலைக்காக உயிர் நீத்த அணைத்து போராளிகள் சாட்சியாக! இவ் மண்ணிக்காக உயிர் நீத்த அரசியல் தலைவர்கள் சாட்சியாக! என தொடங்கி இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் நாம் கொண்ட கொள்கைக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் பங்கம் விளைவிக்காத வகையில் மாநகர சபை நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களாகிய எமது செயற்பாட்டை வழங்குவோம் என உறுதி கூறினர்.

இவ் சத்தியப்பிரமாண நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *