உலகம்

300 க்கும் மேற்பட்டோர் மீது பாலியல் துஷ்பிரயோகம்; சத்திர சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்கள் சிறை

பிரான்ஸில் 300 க்கும் மேற்பட்டோரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல சத்திர சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகாலம் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

ஜோஎல் லெ ஸ்குவார்னெக் (Joël Le Scouarnec) என அழைக்கப்படும் 74 வயதான நபருக்கே குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த 1990களிலிருந்து 2017 வரையிலான காலப்பகுதியில், தன்னிடம் சிகிச்சை பெறுவதற்காக வந்த சுமார் 300 பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஜோல் லே?

கடந்த 2017ஆம் ஆண்டு ஜோல் லே மீது, அண்டை வீட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி, தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாகக் கொடுத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பொலிஸார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது அவரது வீட்டிலிருந்து 3,00,000 புகைப்படங்களும் 650 ஆபாசமான விடியோக்களும், தான் செய்த பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி அவர் கைப்பட எழுதி வைத்திருந்த புத்தகங்களும் பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து 4 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகளில் 2020ஆம் ஆண்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போதுதான், மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததை ஒப்புக் கொண்டார்.

மருத்துவர் அளித்த தகவல் மற்றும் கிடைத்த விடியோ, புகைப்படங்களின் அடிப்படையில், அவர் 158 ஆண் மற்றும் 141 பெண் உட்பட ஏராளமான குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தமை உறுதி செய்யப்பட்டது.

குறித்த வழக்கானது உலகளவில் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவ்வழக்கின் தீர்ப்பு வெளியானது.

அதில் 74 வயதான ஜோஎல் லெ ஸ்குவார்னெக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அதிக பட்ச தண்டனையாக அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *