முச்சந்தி
அஸ்தமிக்கிறதா குர்திஷ்தான் கனவு?… உதயமாகிறதா பலூசிஸ்தான் தேசம்?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(துருக்கியில் நாற்பது ஆண்டுகால தனிநாட்டு போராட்டத்தில் ஈடுபட்ட குர்திஷ் போராளிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஒரு வரலாற்று முடிவை அறிவித்துள்ளனர். இதேவேளை பலூசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்துள்ளது. இவ்விரு தேசிய இனங்களின் உரிமைப் போராட்டத்தின் வரலாற்றுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அலசல்)நீண்ட காலமாக தங்கள் இன அடையாளத்தைத் தக்கவைக்க குர்திஷ் மக்கள் போராடினர். ஆனால் அவர்களை எல்லை தாண்டியும் அழித்தொழிக்கத் துடித்தது துருக்கி. தனிநாடு கோரி போராடும் குர்திஷ் போராளிகள் அமைப்பான பி.கே.கே-க்கும் துருக்கிக்கும் இடையிலான மோதல் 1984 இல் தொடங்கியது. இந்த மோதல் பல்லாயிரக்கணக்கான இறப்புகளுக்கு வழிவகுத்தது.
துருக்கியில் நாற்பது ஆண்டுகால தனிநாட்டு போராட்டத்தில் ஈடுபட்ட குர்திஷ் போராளிகள் போர் நிறுத்தத்தை தற்போது அறிவித்துள்ளனர்.
நான்கு தசாப்த கால ஆயுத மோதலுக்குப் பிறகு, துருக்கியுடனான புதிய சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக, குர்திஷ் போராளிக் குழுவான ‘குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி’ (PKK) ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஒரு வரலாற்று முடிவை அறிவித்துள்ளது.இதற்கு முன்பாக கடந்த 27/2/25 குர்திஷ் அரசியல் குழு, பி.கே.கே அமைப்பு தனது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கலைந்து செல்லுமாறு சிறையில் இருந்து குர்திஷ் போராளித் தலைவர் அப்துல்லா ஓஜலான் அழைப்பை விடுத்தார்.
துருக்கியின் எல்லை தாண்டிய அழிப்பு:
நீண்ட காலமாக போராடி வரும் குர்திஷ் மக்களை எல்லை தாண்டியும் அழித்தொழித்து வந்தது துருக்கி. சிரியாவில் கடந்த ஆண்டு இறுதியில் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான் வழியாகவும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியதால் பாரிய அழிவை அவர்கள் சந்தித்தனர்.
நாற்பது ஆண்டுகால கிளர்ச்சியை நடத்தி வரும் குர்திஷ் போராளிகள், தங்கள் சிறையில் அடைக்கப்பட்ட தலைவரால் போராட்ட அமைப்பை நிராயுதபாணியாக்க அழைப்பு விடுத்தார்.
நான்கு தசாப்த போராட்டம்:
நான்கு தசாப்த கால ஆயுத மோதலுக்குப் பிறகு, துருக்கியுடனான புதிய சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக, குர்திஷ் போராளிக் குழுவான ‘குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி’ (PKK) ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஒரு வரலாற்று முடிவை அறிவித்துள்ளது.
குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) எடுத்த இந்த தீர்மானம் 1980 களில் இருந்து
பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற பல தசாப்த கால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற பல தசாப்த கால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.1999 முதல் இஸ்தான்புல்லுக்கு அருகிலுள்ள ஒரு தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள PKK தலைவர் அப்துல்லா ஓஜலான், துருக்கியுடனான ஒரு புதிய சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த பெப்ரவரி மாதத்தில் தனது குழுவை ஒரு மாநாட்டைக் கூட்டி முறையாகக் கலைக்க முடிவு செய்யுமாறு வலியுறுத்தினார்.
இவ்வருடம் மார்ச் மாதத்தில் PKK ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை அறிவித்தது, ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான சட்ட கட்டமைப்பை உருவாக்குவது உட்பட நிபந்தனைகளை விதித்தது.
குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி 1984 முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியை வழிநடத்தி வந்தது. இப் போராட்டங்களால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டன. இதனால் துருக்கி மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளால் ஒரு பயங்கரவாதக் குழுவாக பட்டியலிடப்பட்டது.
சிரியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், லெபனானில் ஹெஸ்பொல்லா குழுவின் போராட்டம் மற்றும் காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்ளிட்ட பிராந்தியத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றங்களின் பின்னணியில் குர்திஸ்தான் கட்சியின்
அறிவிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாயகம் இல்லாத குர்திஷ் மக்கள் :
மத்திய கிழக்கில் பாரம்பரியமாகவே வாழ்ந்து வரும் இனமான குர்திஷ் மக்கள் (Kurdish) தென்கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வட ஈராக், வடமேற்கு ஈரான், தென்மேற்கு ஆர்மேனியா ஆகிய பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர்.ஆயினும் தாயகம் இல்லாத மிகப்பெரிய இனக்குழுவான குர்திஷ் மக்கள் துருக்கியிலும், சிரியாவிலும் பிற இடங்களிலும் நீண்டகாலமாக துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
ஐந்து நாடுகளில் சிதறி வாழும் குர்திஷ் மக்களின், பேரிடியாக ஐந்து நாடுகளிலுமே அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட இனமாக கருதப்படுகின்றனர். இதன் விளைவாக விடுதலை போராட்டத்திற்கும் தள்ளப்பட்டார்கள்.
பலூசிஸ்தான் தனிநாட்டு பிரகடனம்:
பலூசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்றதாக மே 14இல் அறிவித்துள்ளது. 1947ல் பாகிஸ்தான் மத அடிப்படையில் இந்தியாவை பிரிந்து ஒரு தனி நாடாக உருவானது. ஆனால் உண்மையில் அது வங்காளம், பஞ்சாப், சிந்தி, பலூச்சி, பக்தூன் என ஐந்து தேசிய தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. மொழி அடிப்படையில் கிழக்கு வங்காளம் போராடி 1971ல் வங்காள தேசமாக மலர்ந்தது.
இராணுவ ஆட்சி, மக்களாட்சி என எதுவாயிருந்தாலும் பாகிஸ்தானில் கோலோச்சுவது பஞ்சாபி முஸ்லீம்களும் சிந்தி முஸ்லீம்களுமே. இவர்கள் பலூச்சிகளையும் பக்தூனியர்களையும் (பத்தானியர்கள்) நீண்ட காலமாக ஒடுக்கி வருகின்றனர். அதனை எதிர்த்துப் பாகிஸ்தானில் அவ்விரு இனங்களும் விடுதலை கோரிப் போராடி வருகின்றன.
பொருளாதார ரீதியாக, மற்ற பாகிஸ்தானியர்களுடன் ஒப்பிடும் போது பலூச்சிகள் தனிநபர் வருமானம் மிகக் குறைவு. கட்டமைப்பு ரீதியான பொருளாதாரச் சுரண்டல், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (CPEC) இருந்து பெரும்பாலான பலூச் சமூகத்தை விலக்கியது மற்றும் பிற பொருளாதாரத் திட்டங்களில் இருந்து அந்நியப்படுத்துதல் ஆகியவை பலூச் மக்களை போராட்ட வழியில் செயல்படத் தூண்டின.
பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய
அளவிலான மக்கள் போராட்டங்கள் அப்பகுதியில் மட்டுமல்லாமல் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.
அளவிலான மக்கள் போராட்டங்கள் அப்பகுதியில் மட்டுமல்லாமல் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.பலூசிஸ்தான் போராட்ட வரலாறு :
பிரிட்டீஷிடம் இருந்து 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11இல் பலூசிஸ்தான் பகுதி சுதந்திரம் பெற்றது. இதையடுத்து 1947, டிசம்பர் 16இல் அப்பகுதியை பாகிஸ்தானுடன் இணைப்பது தொடர்பாக பொது மற்றும் மேல்சபை ஆகியவற்றில் தீர்மானம் முன்மொழியப் பட்டது. ஆனால், இதனை இரு சபைகளும் நிராகரித்தன.
இந்நிலையில், பலூசிஸ்தான் மீது பாகிஸ்தான் படையெடுப்பு நடத்தியது. காலத் பகுதி கான் மற்றும் அவரது குடும்பத்தினரை சிறை வைத்தது. அப்பகுதியின் முழுக் கட்டுப்பாட்டையும் கைப்பற்றியது. எனவே 1948-ஆம் ஆண்டு முதல் அப்பகுதி பாகிஸ்தானின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
மறைமுக இந்திய ஆதரவு :
பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்துக்கு இந்தியர்கள் தார்மீக ஆதரவு செய்வதாக பலூசிஸ்தான் விடுதலை இயக்கமான ‘ஹிந்த் பலூச்’ எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ஜிதேந்திரானந்த் சரஸ்வதி கூறுகையில் பலூசிஸ்தான், பிரிட்டிசிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோதிலும், 1948-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீள வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.
பலூசிஸ்தான் மக்களின் சுதந்திர உரிமைகளுக்காக இந்தியர்கள் பங்களிப்பு செய்தனர். தங்களது அடையாளம், கலாசாரம் ஆகியவற்றின் மீது பலூசிஸ்தான் மக்கள் அதிக மரியாதை கொண்டுள்ளனர் என்றும் கூறினார். தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் இந்தியா முன்னணி நாடாக திகழ்வதால் பாகிஸ்தானில் இருந்து பிரித்து பலூசிஸ்தான் தனிநாடாக அமைக்க இந்தியா உதவ வேண்டும் என இந்த இயக்கம் விரும்புகிறது. இதனிடையே பலூசிஸ்தானில் ஏற்பட்டு வரும் அசம்பாவிதங்கள் தொடர்பாக ஐ.நா. சபையில் இந்தியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
பலூசிஸ்தான் இனப்படுகொலை :
பலூசிஸ்தான் மக்கள் மீது தொடர்ந்தும் இனப்படுகொலை நடத்தப்பட்டு வருகிறது. இப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் ராணுவத்தின் அராஜகம் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. ராணுவத்தால் திடீரென நடத்தப்படும் குண்டுவெடிப்புகளால் நூற்றுக்கணக்கானோர் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், பலூசிஸ்தானில் நடைபெறும் கொடுமைகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அதற்கு எதிரான மற்றும் தனிநாடு போராட்டங்களை தீவிரப்படுத்தி சர்வதேசமெங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான பலூசிஸ்தான் மக்களின் சுதந்திர கோஷங்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.சீனாவின் நட்புக்கரம் :
இப்போது பாகிஸ்தானிற்கு பலூச்சிஸ்தான் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாகப் பிரிக்கக் கோரும் இவர்களின் போராட்டத்தை நசுக்குவதில், சீனாவும் நட்புக்கரம் நீட்டிவருவது குறிப்பிடத்தக்கது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பலூசிஸ்தானில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கணிப்பில் 37% மக்கள் தனி பலூசிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
![]()