இலங்கை

கொழும்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றம்; பலப்படுத்தப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு

கொழும்பு- வெள்ளவத்தை கடற்கரையில் பகுதியில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தலின் போது சிங்கள ராவய அமைப்பினர் அங்கு வந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் இன்று கொழும்பு- வெள்ளவத்தை கடற்கரையில் தீபச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்துக்கொண்டுள்ளார்

நினைவேந்தலில் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி அனுஷ்டித்தனர். அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதன்போது சிங்கள ராவய எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த இடத்திற்கு வருகை தந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த நினைவேந்தலில் கலந்துக்கொண்டவர்கள் விடுதலைப்புலி அமைப்பின் பணத்தை பெற்று செயற்படுபவர்கள் என்றும், பலஸ்தீனுக்கு ஆதரவாளர்கள் என்றும், இஸ்ரேவுக்கு எதிரானவர்கள் என்று சிங்கள ராவய அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இதன்போது பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர், பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று முடிந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button