இலங்கை
தவிசாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு நடவடிக்கை

35 உள்ளூராட்சி சபைகளுக்கான தவிசாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றங்களில் அதிகளவான ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சிகளுக்கு அங்கு ஆட்சியமைக்க உரிமை உள்ளது.
எனவே, பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்றுள்ள சபைகளில் தங்களது தரப்பில் தவிசாளராக முன்னிறுத்தப்படுகின்ற உறுப்பினரை ஏனைய தமிழ் கட்சிகளும் ஆதரிக்க வேண்டுமெனக் கோரப்படும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
![]()