உலகம்

6 ஐநா பாடசாலைகளை நிரந்தரமாக மூடிய இஸ்ரேல்; அகதி மாணவர்களின் கல்வி கேள்விக்குறி

ஐக்கிய நாடுகள் சபை, கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீன அகதிகளுக்காக ஆறு பாடசாலைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் கிழக்கு ஜெருசலேமில் உள்ள 6 ஐநா பாடசாலைகளை இஸ்ரேல் நிரந்தரமாக மூடியதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரையிலும் இதுபோன்ற பாடசாலைகளை ஐநா நடத்தி வருகின்றது. நடப்பாண்டு தொடக்கத்தில் இஸ்ரேலில் ஐநா பாடசாலைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

6 ஐநா பாடசாலைகளை நிரந்தரமாக மூடிய இஸ்ரேல்; அகதி மாணவர்களின் கல்வி கேள்விக்குறி | Israel Permanently Closed 6 In Schools

அகதி மாணவர்களின் கல்வி கேள்விக்குறி

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது. இதையடுத்து கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஆறு ஐநா பள்ளிகளை 30 நாள்களுக்குள் மூடும்படி கடந்த மாதம் இஸ்ரேல் கல்வித்துறை மற்றும் காவல்துறை உத்தரவிட்டிருந்தது.

இதற்கான காலக்கெடு நேற்று முன்தினம்(மே 7) முடிவடைந்ததையடுத்து கிழக்கு ஜெருசலேமில் உள்ள 6 ஐநா பாடசாலைகள் நேற்று முதல் நிரந்தரமாக மூடப்பட்டது.

இதனால் 800க்கும் மேற்பட்ட பாலஸ்தீன அகதி மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *