இலங்கை

“வெட்கமில்லையா” – அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த ஹர்ஷ

பொருளாதார வளர்ச்சி வீதம் 3.5 சதவீதத்தால் குறைவடையும் என கூறுவதற்கு அரசாங்கத்திற்கு வெட்கமில்லையா என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தின்  நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தி நாடாக மாற வேண்டும் என்றால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஆண்டிற்கு 8 தொடக்கம் 9 வீதமாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.

அப்போது, இலங்கை விரைவாக அபிவிருத்தி அடைந்த நாடாக மாற வேண்டும் என தேசிய மக்கள் சக்தியினர் விமர்சித்திருந்தனர்.

எனினும், தற்போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் ஆண்டுகளில் வீழ்ச்சியடையும் என அரசாங்கம் கூறுகின்றது. இவ்வாறு கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றால் உங்களின் பொருளாதார திட்டங்களை நீங்கள் மாற்ற வேண்டும்.

எனினும், இந்த அரசாங்கத்திற்கு பொருளாதார மாதிரியை மாற்றினால் எந்த பொருளாதாரத்திற்கு செல்வது என்பது குறித்து தெரியாது” என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *