மாகாண சபைகளுக்கு மிக விரைவில் தேர்தல்; பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக மாகாண சபைகளுக்கான தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போது, மாகாண சபைகள் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.
அதன்போது பிரதமர் மேலும் கூறுகையில்,
அந்தத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டியது அவசியமாகும். ஆனால் மூன்று மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தத் தேர்தலுக்காக நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது. இதனால் வருடக் கணக்கில் நடத்தப்படாது இருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலை முடிந்தளவு விரைவில் நடத்த நவடிக்கை எடுக்கப்படும் என்றார்
![]()