முச்சந்தி

தேர்தலை வெறுத்த வடக்கு மக்கள்!; யாழில் 56.6 வீத வாக்களிப்பு

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பில் வடக்கு மாகாண மக்கள் பெரிதும் அக்கறை காட்டாத நிலையில் வாக்களிப்பு வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா ,மன்னார் என 5 தேர்தல் மாவட்டங்கள் உள்ள நிலையில் கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்களிப்பு வீதத்தை விடவும் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த பாராளுமன்றத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 69 வீத வாக்களிப்பு இடம்பெற்ற நிலையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 56.6 வீத வாக்களிப்பே இடம்பெற்றுள்ளது. இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் 62 வீத வாக்களிப்பும் இம்முறை 61 வீத வாக்களிப்பும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் 63 வீத வாக்களிப்பும் இம்முறை 61.32 வீத வாக்களிப்பும் வவுனியா மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் 65வீத வாக்களிப்பும் இம்முறை 59.56 வீத வாக்களிப்பும், மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில்70வீத வாக்களிப்பும் இம்முறை 70.15வீத வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளது.

இதில் வடக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் மன்னார் மாவட்டத்தில் மட்டுமே கடந்த பாராளுமன்றத்தேர்தலைவிடவும் சற்று அதிகமாகின வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளதுடன் இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பில் வடக்கில் அதி கூடிய வாக்களிப்பு வீதம் பதிவான மாவட்டமாகவும் மன்னார் மாவட்டம் உள்ளது. அதேவேளை மிகவும் குறைந்த வாக்களிப்பு வீதம் பதிவான மாவட்டமாக யாழ் மாவட்டம் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button