பலதும் பத்தும்

தாய்ப் பாசத்தில் சிறுத்தையும் பசுவும்!

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் ஒரு குடும்பத்தினர் புதிதாக வாங்கிய பசுவை இரவு நேரத்தில் தங்கள் வீட்டு வாசலில் கட்டி வைத்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக இரவில் நாய்கள் தொடர்ந்து குரைக்கும் சத்தம் கேட்டு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பசுவின் உரிமையாளர்.
என்ன நடக்கிறது என்பதை அறிய வாசலில் ஒரு கண்காணிப்பு கேமராவை அமைத்துள்ளார்.
அவர் அந்தக் காட்சியைப் பார்த்ததும் மிகுந்த ஆச்சரியத்தில் உறைந்து போனார். இரவு 10 மணியளவில் ஒரு சிறுத்தை அந்தப் பசுவின் அருகே வந்துள்ளது.
ஆனால் அந்த சிறுத்தை பசுவை கடிக்கவோ, தொந்தரவு செய்யவோ இல்லை. மாறாக, அது பசுவின் அருகில் அமைதியாக அமர்ந்து அதனுடன் விளையாடத் தொடங்கியது.
சிறுத்தையும் பசுவும் ஒருவரை ஒருவர் மிகவும் பாசத்துடன் பார்த்துக்கொண்டதும், விளையாடியதும் அந்த உரிமையாளரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
உண்மையில் என்ன நடந்தது என்பதை உரிமையாளர் ஆராய்ந்தபோதுதான் ஆச்சரியமான விஷயம் தெரியவந்தது.
அந்தச் சிறுத்தை பிறந்து வெறும் 20 நாட்களே ஆன நிலையில், அதன் தாயை வேட்டைக்காரர்கள் கொன்றுவிட்டனர்.
அப்போது அந்தப் பசுவின் முந்தைய உரிமையாளர், தாயை இழந்த அந்தச் சிறுத்தைக்குட்டியை காப்பாற்றி, இந்தப் பசுவின் பாலைக் கொடுத்து வளர்த்துள்ளார்.
சிறுத்தை வளர்ந்த பிறகு, அதை காட்டில் விட்டுள்ளனர்.
அந்தச் சிறுத்தை, தன்னை பாசத்துடன் வளர்த்த அந்தப் பசுவை தனது தாயாக நினைத்துவிட்டது போல. அதனால்தான் தினமும் அந்தப் பசுவின் வீட்டைத் தேடி வந்து, அதனுடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கிறது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் விலங்குகளுக்கும் உணர்வுகள் உண்டு என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
ஆனால், சில மனிதர்கள் தான் மிருகங்களைப் போல் இரக்கமின்றி நடந்து கொள்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button