பலதும் பத்தும்
பூமியில் மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத ஒரு இடம்

பூமியில் மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத ஒரு இடம் உள்ளது. அதன் பெயர் மரியானா அகழி. பொதுவாக கடல்களின் சராசரி ஆழம் மூன்றரை கிலோமீட்டர் தான் இருக்கும்.
ஆனால் இந்த மரியானா அகழியின் ஆழம் பதினொரு கிலோமீட்டருக்கும் அதிகம்.
அதாவது, மிகப்பெரிய மலையான எவரெஸ்ட் சிகரத்தை கூட இதற்குள் மூழ்கடிக்க முடியும்.
சந்திரனில் கால் தடம் பதித்த மனிதர்களால் கூட இந்த மரியானா அகழியில் கால் தடம் பதிக்க முடியவில்லை.
இதற்குக் காரணம், கடலுக்குக் கீழே போகும்போது அங்கு அழுத்தம் மிகவும் அதிகமாக காணப்படும்.
இப்போது காணப்படும் நவீன நீர்மூழ்கிக் கப்பல்களாலும் கூட இந்த மரியானா அகழிக்கு செல்ல முடியாது. ஏனென்றால் அங்கு காணப்படும் அழுத்தம் நீர்மூழ்கிக் கப்பல்களை கூட நசுக்கிவிடும்.
![]()