இலங்கை

இந்தியா மீது அணுகுண்டுகளை வீசுவோம்; பாகிஸ்தான் எச்சரிக்கையால் போர் பதற்றம்

இந்தியா போர் நடவடிக்கைகளை எடுக்க தயாராகி வருகிறது என்றும், இந்தியா போரை தொடங்கினால் அந்நாட்டின் மீது அணுகுண்டுகளை வீசுவோம் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாக்குதலுக்கு பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் மூல வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் ஊடகவியலாளர்களிடம் பேசினார். பாகிஸ்தான் தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், இந்தியா இராணுவ தாக்குதலுக்கு ஆயத்தமாக இருப்பது குறித்து நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

எங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்றும், ஆனால் அதே நேரத்தில் போர் பதற்றத்தை தணிக்க அரபு நாடுகள், சீனா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடலை நடத்தி வருகிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியா மீது அணுகுண்டுகளை வீசுவோம் என்று பாகிஸ்தான் கூறியிருப்பது பதற்றத்தை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *