பலதும் பத்தும்

ஒரு மாப்பிள்ளை 2 மணப்பெண்கள்… வைரலான அழைப்பிதழ்

சீனாவில் திருமண அழைப்பிதழ் ஒன்றில், வெள்ளை நிற கவுன் அணிந்த இரண்டு பெண்களுக்கு இடையில் கருப்பு நிற உடையில் ஒரு ஆண் நிற்கும் புகைப்படம் வைரலான நிலையில், சீனாவில் இருவரை திருமணம் செய்வது சட்டவிரோதமானது என்பதால், மூவரும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. ஒரு மணமகன் மற்றும் இரண்டு மணப்பெண்கள் இடம்பெற்ற திருமண அழைப்பிதழ் ஒன்று சமீபத்தில் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அசாதாரண திருமண அழைப்பிதழ் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் தலையீடையடுத்து இறுதியில் ரத்து செய்யப்பட்டது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) செய்தியின்படி, குய்சோ மாகாணத்தில் உள்ள பிஜியிலிருந்து வந்த அழைப்பிதழில், வெள்ளை நிற கவுன் அணிந்த இரண்டு பெண்களுக்கு இடையில் கருப்பு நிற உடை அணிந்திருக்கும் ஒரு ஆண் நிற்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

மேலும், இவர்களின் திருமண நிகழ்வு ஏப்ரல் 19 ஆம் தேதி, அங்குள்ள பிரபல இடமான, ஆடம்பரமான செஞ்சுரி ஜியாயுவான் விருந்து மையத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. மணமகன் மற்றும் இரு பெண்களின் பெயர்களும் அழைப்பிதழில் தெளிவாக எழுதப்பட்டிருந்தன.

சமூக ஊடகங்களில் ஒருவர், நிலைமையை தான் அறிந்திருப்பதாகவும், மணப்பெண்களில் ஒருவர் அந்த ஆணின் முன்னாள் மனைவி என்றும், மற்றொருவர் அவரது தற்போதைய காதலி என்றும் கூறினார். “இந்த மூன்று பேர் திருமணத்திற்கு மூன்று குடும்பங்களின் சம்மதமும் உள்ளது” என்று அந்த பயனர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button