9 வயது முதலே வங்கியால் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் சிறுவன்

உலக அளவில் பலர் தங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை தருவதன் பொருட்டு கல்வி கடன்களை வாங்குவதுண்டு. இந்த கடன்கள் பொதுவாக மாணவர்கள் உயர் படிப்பு மேற்கொள்வதற்கு உதவுகிறது.
இது மாதிரியான ஒரு சூழ்நிலையில், ஒரு சிறுவன் கல்வி கடன் வாங்குவதற்காக ஒரு வங்கி கணக்கை திறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அதற்கு சொல்லப்பட்ட காரணம் அந்த குடும்பத்தையே ஆடிப்போக செய்துவிட்டது.
18 வயதான சௌ டெலி என்ற அந்த சிறுவன் பெனாங் பகுதி மலேசியாவை சேர்ந்தவர். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதன் காரணமாக இந்த சிறுவன் வங்கியால் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளான். அதிலும் இதில் விஷயம் என்னவென்றால், இது இந்த சிறுவன் 9 வயதாக இருக்கும்போதே நடந்துள்ளது.
சமீபத்தில் சௌ உயர் படிப்புக்காக ATC கல்லூரியில் சேர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய உயர் படிப்புக்கான PTPTN (National Higher Education Fund) கடனை ஆகஸ்ட் 2025 இல் பெறுவதற்காக காத்திருந்தார். எனினும் இந்த பிளாக் லிஸ்ட் காரணமாக இவருடைய எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக மாறிவிட்டது.
இந்த PTPTN என்பது மாணவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக கடன் தொகையை டெபாசிட் செய்யும் ஒன்று. இதற்காக ஒரு அக்கவுண்ட்டை திறக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்துள்ளார். உண்மையான பிரச்சனை இதன் பிறகு தான் ஆரம்பித்துள்ளது. நேஷனல் பேங்க் கிளை ஒன்றில் வங்கி கணக்கு திறப்பதற்கான ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.
ஆனால் உடனடியாக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மேபேங்க் என்ற மற்றொரு வங்கிக்கு சென்று மீண்டும் முயற்சி செய்து உள்ளார். ஆனால் அங்கும் இவருடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
![]()