இந்தியா

டெல்லியில் பயங்கர தீ விபத்து – 800இற்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்

இந்தியாவின் டெல்லியின் ரோகிணி செக்டார் -17 இல் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் இன்று (27) காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த விபத்தில், இரண்டு சிறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததோடு, ஐந்து பேர் காயமடைந்தனர்.

டெல்லி தீயணைப்பு சேவை (DFS) அதிகாரிகளின் கூற்றுப்படி, தீ மிக வேகமாகப் பரவியதால் 800இற்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு காலை 11:55 மணிக்கு தகவல் கிடைத்தது. 27 தீயணைப்பு வாகனங்கள் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.

இரண்டரை வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளின் உடல்கள் தீயில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடிசைப் பகுதியின் முன்புறத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் உயரமான சுவர்கள் இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்பட்டதால், தீயை அணைப்பது கடினமாக இருந்ததாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *