இலங்கை

வடக்கில் 7 எம்.பிக்கள் தேசியக் கட்சியில் வருவதற்கு காரணம் தமிழரசு கட்சி

வடக்கில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கட்சியில் வருவதற்கு தமிழரசு கட்சியே காரணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பின் செயலாளர் நாயகமுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து பூந்தோட்டத்தில் குடியிருப்பு வட்டார வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று வட மாகாணத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியில் வருவதற்கு காரணம் தமிழரசு கட்சியே ஆகும். அவர்களின் செயற்பாடு தான் இன்று ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் உள்ள ஒரு ஜனாதிபதி இன்று உள்ளூராட்சி மன்றங்களையும் தங்களுக்கு தருமாறு கூறுவது எந்த வகையின் நியாயமாக இருக்கும். நாங்கள் எங்கள் பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கும், உங்களோடு வாழ்பவர்களுக்குமே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்கை அளித்து ஆதரிக்க வேண்டும்.

நாங்கள் எங்களுடைய தமிழ் கட்சிகளை ஆதரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் வாக்குச்சீட்டு என்பது வெறும் காகிதம் அல்ல. அது பல வலிகளையும் வேதனைகளையும் சுமந்த ஒரு விடயம். இத்தனை ஆயிரம் போராளிகளையும், மக்களையும் இழந்து விட்டு இன்று தேசிய கட்சி ஒன்றின் பின்னால் செல்ல முடியாது. அவ்வாறு இருக்குமாக இருந்தால் எமது போராட்டம் வீணானதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *