ஆகாயப் பந்தல்…. (தொடர்- 08)…. ஏலையா க.முருகதாசன்

மதுசா சரவணனின் வீட்டுக்கு வந்ததிலிருந்து பெரும் குழப்பத்திலும் வியப்பிலுமிருந்தாள். இவர்கள் யார்?,இவர்கள் பூமி மனிதர்கள் இல்லையா என்ற கேள்விகள் அவளை அலைக்கiழித்துக் கோண்டிருந்தன.
தான் சந்தித்த மனிதர்கள் தனது உறவினர்கள் தனது நண்பர்கள் அப்பா அம்மாவுடைய சினேகிதர்கள் என எல்லாருமே ஒரே மாதிரி பொதுக்குணத்தில்தான் இருந்தார்கள்.
ஆனால் சரவணனின் அப்பா அம்மா தங்கை என எல்லோருமே இலங்கைத் தமிழர்கள் போல பொதுக் குணத்திலும் பழக்க வழக்கங்களில் இருந்தாலும் அவர்களை உற்றுக் கவனிக்கம் போது மட்டுமே அவர்கள் பூமிக்குரியவர்களல்லவோ என மதுசா எண்ணத் தொடங்கினாள்,அவளால் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்திலிருந்தாலும் சரவணனையோ அவனின் குடும்பத்தையோ அவளால் விட்டு விலக முடியவில்லை.இனம்பரிய சக்தியொன்று அந்தக் குடும்பத்தைவிட்டு அவளை விலகவிடவில்லை.
யூனிவேர்சிட்டியில் மதுசா சரவணனுடன் பழகியிருந்தாலும் இன்றுதான் அவனின் வீட்டுக்கு முதன்முதலாக வந்திருக்கிறாள். சரவணனின் உயர்ந்த தோற்றம் அளவாக கதைக்கும் அவனின் அழகும் பாங்கும் அவளைக் கவர்ந்திருறந்தாலும் அது அவன்மீது இதுவரையில் காதல் கொள்ள வைக்கவில்லை.
ஆனால் இன்று ஏனோ அவனையே அவளின் நினைப்புச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருந்தது..அதைவிட சாரிணி தன்னை அண்ணி அண்ணி என பாசத்துடன் அழைத்ததும் சரவணன் மீது அவளுக்கிருந்த நட்புணர்வு கடலின் சிறு அலையாக மனதை அடிக்கத் தொடங்கியது.
இனம்புரியாத மகிழ்ச்சியில் காதலுணர்வுக்குள் ஒரு விருபு;பணர்வு குடுக்கும் மகிழ்ச்சி இதயத்தில் படபடப்பைக் கொடுக்கும்.
உடலில் ஏற்படும் உடலுறுப்புகளின் செயல்பாடுகளோ,மனதளவில் ஏற்படும் மனஅதிர்வுகளோ இதயத்தில் வந்து குவியும்.
அமைதியாக தங்கை கொடுத்த பழரசத்தைக் குடித்தபடி பறந்து வந்து கொண்டிருந்த பறவைகள் இரண்டையும் பார்த்துக் கொண்டிருந்த சரவணனை ஓரக்கண்ணால் பார்த்தாள் மதுசா,இதுவரையில் அங்குமிங்கமாக தலையைத்திருப்பி பார்த்துக் கொண்டிருந்த சரவணன் மதுசா தன்னை ஓரக் கண்ணால் பார்க்கும் அதே விநாடிகளில் அவள் பார்ப்பதை அவனும் பார்த்தான் .
அந்தப் பார்வையில் பல அர்த்தங்கள் பொதிந்திருப்பதை அவள் அறிவு கண்டு கொண்டது.சரவணன் சாரிணியின் பெற்றோர் தன்மீதான ஒரு எதிர்பார்ப்பினைக் கொண்டிருந்தமையை மதுசாவால் ஊகிக்க முடியவில்லை என்பதைவிட அதைப்பற்றி அவள் சில நிமிடங்களுக்கு முன்வரை யோசிக்கவே இல்லை.ஆனால் கரவணனின் பார்வையும்,சரவணனின் பெற்றோர் அவளுடன் பேசிய வார்த்தைகளும் தன்னை அவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக்க விரும்புகின்றனரோ என அவளை நினைக்க வைத்தது.
சிலரின் காதல் முதலில் ஒருவருக்கொருவர் பார்க்கும்: பார்வையில் ஆரம்பித்து தயக்கம் கூச்சம் என்பவற்றுக்கூடாக மிக அறுதலாக பயணித்து முழுமையான காதலாகி பல பிரச்சினைக்கு மத்தியில் கல்யாணத்தில் வந்து முடியும்.
இன்னும் சில காதலர்கள் தாம் காதலிக்கும் காலத்தில் ஒருத்தருக்கொருத்தர் தனது காதலி முந்தி யாரையாவது காதலித்திருப்பாளா,தனது காதலன் முன்பு யாரையாவது காதலித்திருப்பானா என்ற சந்தேகங்களை மனதிற்குள் தங்க வைத்து இரவு பகலாக அதைப் பற்றியே யோசித்து யோசித்து காதலன் காதலியிடமோ,காதலி காதலனிடமோ நேரிடையாக கேட்கத் தைரியமற்று நிம்மதியற்றுப் போய் காதலியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கூர்ந்து கவனிப்பதும் அது போல காதலனின் நடவடிக்கையைக் காதலி கூர்ந்து கவனிப்பதும்,ஒருவரையொருவர் குறித்த நேரத்தில் சந்திப்பதாக வாக்குக் கொடுத்து வாக்குக் கொடுத்த நேரத்தில் ஒருவரையொருவர் குறித்த நேரத்தில் சந்திக்க முடியாமல் போய் அந்தச் சந்திப்பு பிந்துமானால் இருவரும் அவளுக்கு தொடர்பு இருக்கலாமோ என்று காதலியும,;,அவளை நம்ப முடியாது கொஞ்ச நாளாக அவளின் போக்கே சந்தேகத்திற்கிடமாக இருக்கின்றது,என்னைக் காதலிப்பது போல நடித்து வேறு காதலுடன் தொடர்பிலிருக்கிறாளோ என இருவரும் ; யோசித்து நிம்மதியற்று இருப்பார்கள்.

காதலர்கள் எப்ப ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்களோ அப்பொழுதிலிருந்தே காதல் சந்தேகம்,பொய் சொல்லுதல்,நம்பிக்கையீனம் போன்ற குணங்களையும் தன்னோடு இணைத்துக் கொண்டு வந்தவிடும்.
காதல் என்பது ஒருவருக்கொருவரின் உடலோடும்,உடலின் ஈர்ப்போடும் சம்பந்தப்பட்டு காமத்தையும் முன்னிறுத்தியதாகவும் இருப்பதால் ஒரு சிலகாதலன்கள் காதலிக்கும் போது காதலியை அனுபவித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் தனது விருப்பத்தை தனது காதலியிடம் அவ்வப்போது சொற்கள் மூலமும் சைகைள் மூலமும்,கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அரவணைத்தல் முத்தமிடல் மூலமும் உணர்த்திய போதிலும் நூற்றில் ஒருவர் அல்லது இருவரே காதலனின் விருப்பத்திற்கு என்ன ஆகுமோ ஏது ஆகுமோ இது பெற்றோருககுத் தெரிய வந்தால்,தூரஷ்டவசமாக தான் கர்ப்பமுற்றால் தனது பெற்றோர் உயிரை விட்டுவிவார்களே எனப் பயந்து பயந்து காதலனின் விருப்பத்திற்கு சம்மதிப்பதுமுண்டு.
ஆனால் இவை எதுக்குள்ளும் சரவணன் மதுசாவின் காதல் அடங்கவில்லை.காதல் உணர்வு மதுசாவைச் சற்றி நின்றாலும் சரவணனின் குடும்பம் எவர்கள் என்பதை மதுசா கொண்ட காதல் அதனை முந்திச் செல்லவில்லை.
சரவணன் தன்னை விரும்புகிறான் அமைதியாக ஒரு கண்ணியத்துடன் காதலிக்கிறான் என்பதை அன்றைய ஒருநாள் பொழுதின் மணித்தியாலக் கழிதலில் மதுசா புரிந்து கொண்டாள்.
தனது தாயார் ஒரு உளவியல் பட்டதாரியாக இருந்ததுடன்,வேதியலில் விசேட பட்டதாரியாகவும் இருந்ததனால் அப்பப்ப மனிதர்களின் உளவியல் சம்பந்தமாகவும் உள மாறுபடல்,ஒத்துப் போதல்,முரண்படுதல் என எல்லாவற்றக்கும் பல்வேறு வேதியல் மூலகங்களால் ஆக்கப்பட்ட உடம்பே காரணம் எனவும்,மனிதர்களின் மூளைக்குள் செயல்படும் சமிக்ஞைகள்தான் எம்மை வழிநடத்தகின்றன என்று மதுசாவின் தாயார் மகளுக்கு சொல்வதும்,மதுசாவும் தாயும் தகப்பனும் தாங்கள் அறிந்தவற்றை ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடி புதிய அறிதலைப் பெறுவதுமாக மதுசா குடும்பத்தின் வாழ்வும் ஒரு புரிந்துணர்வுக்கு உட்பட்ட உயர் பண்புடன் சென்று கொண்டிருந்து.
கல்வியலில்: மதுசாவின் தாய் சகுந்தலாவிற்கு ஒரு பணியில் இருக்கக்கூடிய தகுதியிருந்தும் அவள் வேலைக்கு போக முயற்சிக்கவில்லையே என்பதில் மதுசாவுக்கும்,மதுசாவின் தந்தைக்கும் கவலை இருக்கவும் செய்தது.
என்னதான் பகுத்தறிந்து நடப்பவளாக தனது மகளிருந்தாலும்,தான் சொல்லும் அறிவுரைகளையோ தகப்பன் சொல்லும் அறிவுரைகளையோ மீறியும் மதுசா நடந்து கொள்வாளோ என்ற ஐமிச்சம் தாய்க்கு இருந்தது.
பருவ வயதில் ஏற்படுகின்ற பாலியல் தூண்டல் காரணமாக தங்களுடைய மகளும் யாரையாவது காதலிக்கலாம் என மதுசாவின் தந்தையான வேல்ஆனந்தனும் சகுந்தலாவும் நம்பினர்.
சரவணனின் குடும்பத்தினருடனான ஒருநாள் பழக்கமும்,சரவணனின் தஙகச்சியாரான சாரிணி மதுசாவைப் பார்த்து அண்ணி அண்ணி என பாசத்தடன் அழைத்துக் கொண்டிருந்தமையும், அந்தக் குடும்பத்துடன் பல நாட்கள் பழகியது போல அவளை உணர வைத்தது.

மதுசா,சாரிணி சரவணனுக்கு அருகில் இருந்தாலும் அவளின் எண்ணங்கள் அங்குமிங்குமாக சுழன்ற கொண்டிருந்தன,அவள் மனம் ஒரு நிலையில் இல்லை.
தனியனாக வானத்தை நோக்கிப் பறந்து முகில்களைக் கடந்து சென்ற அந்த அதிசயப் பறவை இன்னொரு பறவையுடன் திரும்பி வந்து தங்களுடைய இருப்பிடமான நடப்பட்டிருந்த மரக்கிளையில் அமர்ந்தன.
அமர்ந்த இரண்டு பறவைகளும் மதுசாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.மனிதர்களின் கண்கள் போலவே கருவிழியம் இமைகளும் அந்த இரு பறவைகளக்கு இருந்த போதிலும்,பழைய பறவையுடன் வந்த புதிய பறவையின் விழி பச்சையாக இருந்தது.
மதுசாவை அந்தப் பறவை மனிதர்கள் பார்ப்பது போல உற்;றுப் பார்க்கவே திகைத்த மதுசா சாரிணியைப் பார்த்து அந்தப் பறவை என்னைப் பார்க்கிற விதம் எனக்கு ஏதோ மாதிரி தெரியுது என்கிறாள்.
(தொடரும்…)
![]()