பலதும் பத்தும்

யாழ்.மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி ஒக்ரோபர் 31 இல் மாநகர சபைக்கு கையளிப்பு

நகர அபிவிருத்தி, கட்டுமான மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் டி. பி. சரத் ஆகியோர் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில் யாழ்.மாநகர சபைக்காக அமைக்கப்படும் புதிய கட்டடத் தொகுதியைப் பார்வையிட்டார்.

இந்தக் கட்டடத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டியதற்கான பணிக் கட்டளை இதன்போது வழங்கப்பட்டதுடன் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31 ஆம் திகதி புதிய கட்டடத் தொகுதி யாழ்.மாநகர சபையின் பாவனைக்கு வழங்கப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விஜயத்தில் நகர அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர், யாழ்.மாவட்ட ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் துறைசார் உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

யாழ் மாநகர சபைக்காக உருவாக்கப்பட்டு வருகின்ற இந்தக் கட்டிடத் தொகுதி கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியால் பொருட்களின் விலை உயர்வு காரணமாக முழுமையாக பூரணப்படுத்தாமல் நீண்டகாலமாக இழுபறியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button