இலங்கை

பஹல்காம் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி, இந்திய பிரதமருடன் தொலைபேசி உரையாடல்

இந்தியாவின் காஷ்மீர் – பஹல்காமில் இடம்பெற்றுள்ள தாக்குதலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வன்மையாக கண்டித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சுமார் 15 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலை அறிந்ததும் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறிய ஜனாதிபதி, இலங்கை எப்போதும் இந்திய மக்களுடன் சகோதரத்துவத்தால் பிணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

உலகில் எங்கு பயங்கரவாதம் இடம்பெற்றாலும் அதனை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பில் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார்.

தற்போதைய பதற்றமான சூழ்நிலை விரைவாகத் தீர்க்கப்பட்டு பிராந்திய அமைதி நிலைநாட்டப்படுவதை இலங்கை நம்புவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *