பலதும் பத்தும்

திருமலை கடற்படை தளத்தில் நீருக்கடியில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

இலங்கை கடற்படையின் திசைகாட்டி சேவையைச் சேர்ந்த, மாலிமா சுழியோடி சமுதாயம் (Malima Diving Club) கடற்படை சுழியோடிகள் பிரிவுடன் இணைந்து, கடற்படை வரலாற்றில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட நீருக்கடியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் திருகோணமலை பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய, இலங்கை மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொண்டு வந்து சுழியோடுவதை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட, நீருக்கடியிலான இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொங்கலுடன் சமையல் செயல் விளக்கங்கள், நாட்டுப்புற விளையாட்டுகள் மற்றும் பல கலாசார நிகழ்வுகளும் வெற்றிகரமாக இடம்பெற்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button