பலதும் பத்தும்

பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் முதல் விண்வெளி பயணம்

ஆறு பெண்கள் விண்வெளி தொடர்பான வரலாற்றில் இடம்பெற இருக்கிறார்கள்.

ஆம், திங்கட்கிழமை, முதன்முறையாக பெண்கள் மட்டுமே பயணிக்கும் ராக்கெட் ஒன்று விண்வெளிக்குச் செல்ல இருக்கிறது.

யார் யார் விண்வெளிக்குச் செல்கிறார்கள்?

பொப்பிசைப் பாடகி கேற்றி பெரி, உலக கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸின் காதலியும், எழுத்தாளருமான லாரன் சான்ச்சேஸ், ஊடகவியலாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான கெய்ல் கிங், சமூக ஆர்வலரான அமன்டா (Amanda Nguyen), முன்னாள் ரொக்கெட் அறிவியலாளரான ஆய்ஷா (Aisha Bowe) மற்றும் திரைப்படத்துறையைச் சேர்ந்த கெரியேன் (Kerianne Flynn) ஆகியோர்தான் விண்வெளிக்குச் செல்லும் பெண்கள்.

 

திங்கட்கிழமை, அமேசான் நிறுவனரான கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் (Blue Origin) என்னும் ராக்கெட்டில் இவர்கள் ஆறு பேரும் விண்வெளிக்குச் செல்ல இருக்கிறார்கள்.

இதற்கு முன் ஒரு பெண் தனியாக விண்வெளிக்குச் சென்றது 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும். ஆம், 1963ஆம் ஆண்டு, Valentina Tereshkova என்னு ரஷ்யப் பெண் பொறியாளர்தான் தனியாக விண்வெளிக்கு பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.