பலதும் பத்தும்

இலங்கையில் சிக்கித் தவிக்கும் பராசக்தி படக்குழுவினர்?

பராசக்தி படக்குழுவைச் சேர்ந்த சிலர் இலங்கையில் சிக்கித் தவிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொழும்பில் இடம்பெற்றது.

இங்கு, 1960-களின் காலகட்டத்திற்கான நம்பகத்தன்மைக்காக பழைய ரயில் நிலையம், கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகள் என காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த நிலையில், இலங்கை படப்பிடிப்பு முடிந்ததால் இயக்குநர் சுதா கொங்காரா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்டோர் சென்னை திரும்பினர்.

ஆனால், படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இலங்கையில் படப்பிடிப்பை நடத்திக்கொடுக்க ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தததாகவும் படப்பிடிப்பு முடிந்ததும் மீதத் தொகையைச் செலுத்ததாதல் அந்நிறுவனம் பராசக்தியில் பணியாற்றிய சிலரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், அவர்கள் இலங்கையிலிருந்து சென்னை திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் நடித்து வெளிவந்த ‘தி கோட்’ படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது நடந்த செலவுக்கும் அதைத் தயாரித்த நிறுவனம் பாக்கி வைத்துவிட்டுப் போனதாம். அப்படி இந்த ‘பராசக்தி’ படத்திற்கு நடந்து விடக் கூடாதென்பதுதான் பாஸ்போர்ட் பிடுங்கல் என்கிறார்கள்.

இவ்வளவு பெரிய நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா என கோலிவுட்டில் உள்ள தயாரிப்பு நிர்வாகிகள் கடிந்து கொள்கிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button