மட்டக்களப்பு மாவட்ட தமிழ் கிராமங்களின் கல்வி எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள், தீர்வுகள்; ஓர் ஆய்வுப் பார்வை! … சின்னத்தம்பி குருபரன்

மட்டக்களப்பு மாவட்டத்தினை மையப்படுத்திய பாடசாலைக் கல்வி தொடர்பான முழுமையான கள ஆய்வொன்று இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. 2007, 2008 ஆம் ஆண்டுகளில் யுனிசேவ் நிறுவனத்தின் அனுசரணையுடன் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்கள், அவர்களில் இடைவிலகியோர், பாடசாலைக்குச் செல்லாதவர்கள், இடைவிட்டுப் பாடசாலைக்குச் செல்வோர், உரிய வயதில் பாடசாலைகளில் சேர்க்கப்படாதவர்கள், குடும்பச் சூழ்நிலைகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வலய மட்டத்தில் பரிகார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
2009 இலும் அதற்கு முன்னரும் உள்றாட்டு யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடப்பெயர்வுக்கு உள்ளான மாணவர்களின் கல்வி இழப்புக்கள் தொடர்பாக யுனிசேவ் நிறுவனத்தின் அனுசரணையுடன் வடக்கு, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு 2010, 2011 களில் துரித கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இவை யாவும் குறிப்பிட்ட தேவை, நோக்கம் கருதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் செயற்பாடுகளுமாகும். அவை சகல பாடசாலைகளையும் உள்ளடக்கியதாகவும் முழு வகுப்புத் தரங்களையும் உள்ளடக்கியதாகவும், மாணவர்களின் கற்றல் பெறுபேறுகள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பிற்பட்ட காலங்களிலும் சில தேவை கருதிப் பல ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அண்மைக் காலங்களில் பல பாடசாலைகள் தொடர்பாக மாணவர்களுக்கும் பாடசாலைக்கும், சமூகத்துக்கும் பாடசாலைக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கை குறைந்து வருதல், பல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இ்டையே காணப்படும் காழப்புணர்வு, சில அதிகாரிகளின் அசமந்தப் போக்கு, கற்றலில் ஈடுபாடு குறைதல், பெரும்பாலான மாணவர்கள் பிரத்தியேக வகுப்புக்களை நாடல். அதிகரித்துக் கொண்டிருக்கும் வறுமை, கற்று முடிந்தவுடன் அரச தொழில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இழப்பு, பல பாடசாலைகளின் வகுப்பறைகளில் உயிரோட்டமான கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமை, பல ஆசிரியர்களின் இற்றைப்படுத்தப்படாத கற்றல் செயற்பாடுகள், அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பும் மதிப்பீடும் இன்மை, பல அதிபர்கள் போதனாவழித் தலைமைத்துவத்தைக் கொண்டிராமை, அரச தொழில்களில் உள்ளோரும் தொழில் இல்லாதோரும் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்கின்றமை ஆகிய இன்னோரன்ன காரணிகள் பல இன்றைய கல்விச் செயற்பாட்டைச் சவாலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டம் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் 5 கல்வி வலயங்களையும் 14 கல்விக் கோட்டங்களையும் 345 நிரந்தர கிராம சேவகர் பிரிவுகளையும் 11 பதிவு செய்யப்படாத பிரிவுகளையும், 363 பாடசாலைகளையும் எள்ளடக்கியது. இம்மாட்டத்தில் 45 வீதத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கஷ்டம், அதிகஷ்டப் பிரதேசங்களில் உள்ளவையாகும். இவற்றுள் 80 வீதத்துக்கு மேற்பட்டவை விவசாயக் கிராமங்களாகும்.
இவ்வாண்டு (2025) தை, மாசி மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் சுயாதீனமாக, பக்கச் சார்பின்றி 2024 கல்வியாண்டுக் கல்வி நடவடிக்கைகள் ஆய்வுக்கு உட்பத்தப்பட்டன. ஆய்வுக்கு உட்படுத்தப்படுவோருக்குத் தெரியாதவாறு நட்புறவுடன் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 50 கிராமங்களில் இருந்து 200 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 50 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள், 25 அதிபர்கள், பாடசாலை மாணவர்கள், சில அரச உத்தியோகத்தர்கள், ஊர்ப்பெரியவர்கள், கிராமிய அமைப்புக்கள், இளைஞர், யுவதிகள், அரச பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றோர், பாடசாலைகளில் இருந்து இ்டைவிலகியோர் சிலரும் நட்பு ரீத்யாக உரியவர் சுயாதீனமாகக் கருத்துக்களை வெளியிடும் வகையில் தாம் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாத வகையில் வெளிப்படையாக உணமை நிலவரங்கள் அலசப்பட்டன. தாம் ஆய்வுக்கு உட்படுகிறோம் என்பது தெரியவந்தால் பல உண்மைகளை மறைத்து விடுவார்கள் என்பதனால் இந்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
ஆய்வுக்காகத் தெரிவு செய்யப்பட்ட 50 கிராமங்களும் அரச நியமங்களின்படி வகைப்படுத்தப்பட்ட நகரங்களை அண்மித்துள்ள பூரணமான அடிப்படை வசதிகளைக் கொண்ட கிராமங்கள், ஓரளவு வசதிகள் குறைந்த கஷ்டப் பிரதேசக் கிராமங்கள், அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த அதி கஷ்டப் பிரதேசக் கிராமங்கள் என வகைப்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வுக்கென ஐந்து வயதைப் பூர்த்தியடைந்து 16 வயதுக்கு இடைப்பட்ட கட்டாயக் கல்வி வயதுடைய பிள்ளைகளைக் கொண்ட 200 குடும்பங்கள் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டன. அவற்றுள் 145 சமூர்த்தி நிவாரணம் பெறும் துடும்பங்களும் ஏனையவை சமூர்த்தி நிவாரணம் பெறாத குடும்பங்களுமாகும். இக்குடும்பங்களில் இருந்து 437 பாடசாலை செல்லும் மாணவர்களும் 122 மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவலகியோரும் இடை விலகும் அபாய நிலையில் (Risk Drop out) உள்ளோர் 144 பேரும், 24 பிள்ளைகள் உரிய வயதில் பாடசாலையில் சேர்க்கப்படாதோரும், இவற்றில் 22 குடும்பங்களில் உள்ள தாய்மாரும் 16 குடும்பங்களில் தந்தையும் வெளிநாடுகளில் வேலை செய்வதாகவும், பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் 31 உம் இனங் காணப்பட்டன. இது தொடர்பான விபரம் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்கள் 603 பேரில் 2022, 2023, 2024 களில் 21 வீதமானோர் இடைவிலகி இருக்கின்றனர். பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருக்கும் 437 மாணவர்களுள் 2024 இல் பாடசாலைக்குச் சென்ற நாட்களைப் பெற்றோர் கூறிய தகவலின்படி கணக்கிட்டுப் பார்த்ததில் மொத்தப் பாடசாலை நாட்களில் ஏறக்குறைய 45 நாட்களுக்கு மேல் பாடசாலைக்குச் செல்லாதிருந்தமை இனங்காணப்பட்டது. இத்தகவலைப் பாடசாலைத் தினவரவுப் பதிவேட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்திருந்தால் சிலவேளை இவ்வெண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம். இவ்வாய்வின்படி இது 32 வீதமாகும். ஐந்து வயதைப் பூர்த்தியடைந்த பின் பாடசாலையில் சேர்க்கப்படாதோராக 4 வீதமானோர் காணப்பட்டனர். இவை
தொடர் இல விபரம் வசதியான கிராமங்கள் கஷ்டம் அதி கஷ்டம் மொத்தம்
1 கிராமங்கள் 10 20 20 50
2. குடும்பங்கள் 40 70 90 200
3 சமூர்த்தி நிவாரணம் பெறுவோர் 25 45 75 145
4 சமூர்த்தி நிவாரணம் பெறாதோர் 15 25 15 55
5 பாடசாலை செல்வோர் 105 166 176 437
6 பாடசாலை செல்லாதோர் 6 12 19 37
7 இடை விலகியோர் 16 26 36 78
8 இடைவிலகும் ஆபாயமுள்ளோர் 28 42 74 144
9 உரிய வயதில் பாடசாலையில் சேர்க்கப்படாதோர். 4 7 13 24
10 தாய் வெளிநாட்டில் 6 11 5 22
11 தந்தை வெளிநாட்டில் 4 8 4 16
12 பெண் தலைமை தாங்கும் குடும்பம் 5 12 14 31
யாவும் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வியில் குறிப்பாக தமிழ் கிராமங்களில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தப் போகின்றன.
கல்வி அமைச்சு ஒரு வருடத்தில் குறைந்த படசம் பாடசாலை நடத்தப்பட வேண்டிய நாட்களைத் தீர்மானித்துச் சுற்றுநிருபமாகப் பாடசாலைகளுக்கு அனுப்புகின்றது. அதன்படி வருடத்தில் 200 நாட்களுக்குக் குறையாத வகையில் பாடசாலை நாட்கள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்நாடகளில் பாடசாலைப் பரீட்சைகள், விழாக்கல், விளையாட்டுப் போட்டிகள், ஆலய உற்சபங்கள், திருமன, மரண, வீடுகள், சுற்றுலா, கூட்டங்கள், பயற்சிகள், அதிபர், ஆசிரியர்கள் பெறும் லீவுகள், தொழிற் சங்கப் போராட்டங்கள், அரசின் விசேட விடுமுறைகள், ஆசிரியர் பாடசாலைக்குச் சென்றிருந்தும் கற்றலுக்காக வகுப்பறைக்குச் செல்லாமை போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகளுக்காக மாணவர்களின் பல கற்றல் மணித்தியாலங்களும் பல பாடசாலைகளில் களவாடப்பட்டிருக்கின்றன.
பல பாடசாலைகளில் நூற்றுக்கும் குறைவான பாடசாலை நாட்கள் கற்றலுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் அவதானிக்கப்பட்டன. பல பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி நடவடிக்கைகளுக்காக ஒரு மாதத்துக்கும் மேலான பாடசாலைக் கற்றல் நேரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தமையும் குறையாகச் சுட்டிக்காட்டப்பட்டன. அதேபோல் பெரிய பாடசாலைகள் சிவற்றில் கோயில்களில் ஒன்பது நாட்களும் நவராத்திரி பூசை நடத்துவது போல் பாடசாலைகளில் நடத்தப்பட்டு மாணவர்களின் கற்றல் நேரம் பயன்படுத்தப் பட்டிருந்தமைளயும் இனற்காணப்பட்டன. இன்னும் சில பாடசாலைகளில் பாடசாலை நேரத்தில் ஆசிரியர் குழுக் கூட்டம், அபவிருத்திக் குழுக் கட்டங்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டங்கள் நடாத்தப்பட்டு மாணவர்களின் கற்றல் நேரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிபரும் ஆசிரியரும் நிதைதால் எதுவும் செய்வார்கள் என்பதனைப் பல பெற்றோரும் கற்றோரும் சுட்டிக்காட்டி இருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019 வரை மாணவர் இடைவிலகல் சராசரி 4 வீதத்திலும் குறைவாகவே காணப்பட்டது. கல்குடா, மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்பு ஆகிய கல்வி வலயங்களில் இ்டை விலகுவோர் 4 வீதத்தையும் தாண்டி இருந்தனர். மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி ஆகிய வலயங்களில் 3 வீதத்திலும் குறைவாகவே மாணவர் இ்டைவிலகல் காணப்பட்டிருந்தன. இவற்றுடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் இருந்து இடை விலகுவோர் வீதம் அதிகரித்துச் செல்வதைக் காணலாம். அத்தோடு மாணவர் தினசரி வரவும் பாடசாலைகளில் ஒப்பீட்டு ரீதியாகக் குறைந்து கொண்டு செல்வதனையும் அவதானிக்கலாம். மாவட்டத்தின் பிரபலமான மற்றும் நன்மதிப்பினைப் பேணும் பாடசாலைகள் மாணவர் தினசரி வரவினை மிக இறுக்கமாகக் கடைப்பிடிப்பதனால் அப்பாடசாலைகளில் இடை விலகல் மிகமிகக் குறைவாவே காணப்படுகின்றன.
இடை விலகலுக்கும் பாடசாலைகளில் தினசரி வரவு குறைந்து சென்றமைக்கும் பிரதான காரணமாகச் சுட்டிக் காட்டப்படுவது குடும்ப வறுமையாகும். Asia Lean Report (2023) இன்படி இலங்கையின் வறுமை நிலை 2020 இருந்து 2023 ஏப்ரல் வரை 35 இலட்சமாக இருந்து மூன்று வருட காலத்துக்குள் 75 இலட்சம் பேராக அதிகரித்திருக்கிறது. இக்காலப் பகுதிக்குள் இரண்டு இலட்சம் சிறுவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகி இருப்பதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டி இருந்தது. அத்தொகை தற்போது மேலும் அதிகரித்திருக்கிறது என்பதும் உண்மையாகும்.
2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் கல்வி, சுகாதாரக் குறிகாட்டிகளைக் கொண்ட கணக்கெடுப்பின்படி, இலங்கையில் உள்ள 3.5 மில்லியன் பாடசாலை செல்லும் 10-19 வயதுப் பருவத்தினரில் 71 வீதமானோர் பாடசாலைக்குச் செல்கிறார்கள் என்பதும் அதேலேளை 29 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. இக்கணக்கெடுப்பில் இலங்கையில் (2024) 40 அரசாங்கப் பாடசாலைகளில் 8-12 வகுப்புக்களில் கல்வி கற்கும் 3,843 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்படி, 13 முதல் 19 வயதுக்குட்பட்ட கட்டிளமைப் பருவத்தினர் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வு குறித்த வயதுப் பருவ மாணவர்களின் உடல் எடை, திறன்பேசிப் பாவனை, நாளொன்றுக்குகப் பயன்படுத்தப்படும் கற்றல் நேரம், உறங்கும் நேரம், உணவுப் பழக்கவழக்கம், மது மற்றும் போதைப் பாவனை, புகைத்தல், நண்பர்கள் சேர்க்கை, தனிமை ஆகிய பல விடயங்களை முதன்மைப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வறிக்கையானது, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகப் பிரதியமைச்சர் வைத்திய கலாநிதி ஹன்சக விஜேமுனி தலைமையில் சர்வதேசப் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வௌியிடப்பட்டுள்ளது. இதிலுள்ள தகவல்களில் பல மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்மால் செய்யப்பட்ட ஆய்வின் பல தரவுகள் தகவல்களோடு ஒத்திருப்பதனையும் அவதானிக்க் கூடிதாக உள்ளது.
இவ்வாய்வின்படி இரண்டு (2021,202) வருட காலத்துக்குள் 31 வீதமான சிறுவர்கள் பாடசாலைக் கல்வியைவிட்டு இடைவிலகி இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கொவிட்-19 கொரோனாத் தாக்கம், நாட்டில் காணப்பட்ட அரசியல், பொருளாதார நெருக்கடி, அமெரிக்க டொலர் பற்றாக்குறை, டொலரின் பெறுமதி ஏற்றம், இறக்குமதிக் கட்டுப்பாடு, உற்பத்திக் குறைவு, பொருட்களின் விலை ஏற்றம், பணவீக்கம், அதனால் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, தொழில் இழப்பு, தொழிலின்மை ஆகியவற்றால் மத்திய மற்றும் வறுமைக் கோட்டின்கீழ் உள்ளோரின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டது. பலர் ஒருவேளை உணவு உண்பதற்காகவே போராடிக் கொண்டிருந்தனர். அதிக விலை கொடுத்து ஊட்டச் சத்துள்ள உணவு உண்பதைத் தவிர்த்தனர். இவ்வேளையில் பெரும்பாலான குடும்பங்களில் வாழ்வா? கல்வியா? என்ற கேள்வியும் எழுந்திருந்தன. அது மாத்திரமன்றி மாணவர்களின் கற்றல் உபகரணங்கள், சூ, சொக்ஸ், சவுக்காரம், போக்குவரத்துக் கட்டணம், மின்கட்டணம் ஆகியனவும் இரணடு மடங்கு அதிகரித்திருந்தன.
இவ்வாய்வின்படி இத்தகைய காரணங்களால் 2024 இல் 23 வீதத்துக்கும் மேலான மாணவர்கள் இடை விலகி இருக்கின்றனர். கொப்பி, பென், பென்சில், அழிப்பான் கொண்டு செல்லாமைக்காகவும், தலைமுடி வெட்டாமைக்காகவும், தினமும் சீருடை கழுவாமைக்காகவும், சூ, சொக்ஸ் அணிந்து வராமைக்காகவும் பாடசாலைகளில் கொடுக்கப்பட்ட தண்டனைகளின் காரணமாக 17 வீதமான பிள்ளைகள் இடைவிலகி இருக்கின்றன. 23 வீதமான (10 – 16 வயதுக்கு இடைப்பட்டோர்) மாணவர்கள் தொழில் நிமித்தமாக இடைவிலகி இருக்கின்றனர். 17 வீதமான மாணவர்கள் அதிபர், ஆசிரிளர்கள், பாடசாலை மீது கொண்ட தொடுபயம் (Phobia-வெறுப்பு) காரணமாக இடை விலகி இருக்கின்றனர். இதில் பல ஆசிரியர்களின் பிற்போக்கான கற்றல் செயன்முறைகள், சில ஆசிரியர்கள் கொடுத்த உள, உடல் ரீதியான தண்டனைகள், நிர்வாக, முகாமைத்துவச் சீர்கேடுகளும் அடங்கும். ஏனைய காரணங்களுக்காக 43 வீதமான மாணவர்களும் இடை விலகி இருக்கின்றனர். இவ்வீதங்களில் சில ஏனைய வகைகளுக்குள்ளும் அடங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளின் தினசரி மாணவர் வரவினைக் கண்காணிப்பதற்காகப் பாடசாலை மட்டத்தில் வரவுக் கண்காணிப்புக் குழு, ஒழுக்கம் கட்டுப்பாட்டுக் குழு, வகுப்பாசிரியர், பாட ஆசிரியர்கள் ஆகியோரும் செயற்படு நிலையில் இருக்கின்றனர். இவற்றைவிட பாடசாலை வரவுக் குழுவையும், கட்டாயக் கல்விக் குழுவையும் இணைத்து 2016 இல் 1004/24 ஆம் இலக்கச் சுற்றுநிருபத்துக்கு இணங்க பாடசாலைக் குழு தாபிக்கப்பட்டு மாணவர்களின் தினசரி வரவு கண்காணிக்கப்பட்டிருக்க வேண்டும். 70 வீதத்துக்கு மேற்பட்ட பாடசாலைகளில் இக்குழு இயங்கவில்லை. ஏனைய பாடசாலைகளில் இருந்தும் செயற்படவில்லை. இதேபோல் கோட்ட மட்டத்தில் கோட்டக் கல்விப் பணிப்பாளரின் தலைமையில் மாணவர் வரவின்மை தொடர்பான பிரச்சினைகளைக் கண்காணிப்பதற்கான கண்காணிப்புக் குழுவும் இயங்குதல் வேண்டும். இவை பெரும்பாலான கோட்டக் கல்வி அலுவலகங்களில் செயற்படவில்லை என்பதும் நிதர்சனமாகும். இக்குழுக்கள் பாடசாலைகளில் வினைத்திறனுடன் செயற்பட்டிருந்தால் மாணவர் வரவின்மை, இடைவிலகல், இடைவிலகும் அபாயமுள்ளோர் தொடர்பான பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை மட்டுப்படுத்தி இருக்கலாம்.
மாணவர் தினசரி வரவு, இடைவிலகல், வரவு குறைதல், இடைவிட்ட வரவில் பாடசாலைகளின் பலவீனமும் செல்வாக்குச் செலுத்தி இருந்தது. பல அதிபரிடம் தலைமைத்துவ, முகாமைத்துவ, நிர்வாகத் திறன் குறைவாக இருநதமை. இன்னும் சில அதிபர்கள் பதவி, அதிகாரம், மேலதிகாரிகளின் பக்கபலம், செல்வாக்கு என்பவற்றால் அதிகாரத்தைத் தவறான வழிகளில் பயன்படுத்தியமை ஆகிய சீரற்ற முகாமைத்துவச் செயற்பாடுகளால் பாடவிதான அமுலாக்கம் பாதிக்கப்பட்டிருந்தது. பல வகுப்பறைகளில் கற்றல் செயற்பாடுகள் திருப்தியின்றி இருந்தமையால் மாணவர்களின் தினசரி வரவு பாதிக்கப்பட்டிருந்தமை தெரிய வந்தது. 45 வீதமான மாணவர்கள் ஆசிரியர்களின் செயலூக்கமற்ற கற்றலையும் உயிரோட்டமற்ற வகுப்பறைச் செயற்பாடுகளையும் சுட்டிக்காட்டி இருந்தனர். 33 வீதமான ஆசிரியர்கள் மணவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்குவதாகவும், மாணவர்கள் பிழைகள், தவறுகள் செய்யும்போது மிக மோசமான வார்த்தைகளைப் பிரயோகித்துத் திட்டித் தீர்ப்பதாகவும், ஒரு சில ஆசிரியர்கள் வகுப்பறைகளில் மாணவர்களுடன் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாகவும் அறிய முடிந்தது.
பெற்றார், மாணவர்களில் 22 வீதமானோர் பாடசாலைக் கல்வியினதும் கற்றலின் எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கை இழந்திருப்பது தெரிய வந்தது. பட்டம் பெற்ற பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகள், சாதாரன தரம், உயர் தரம் கற்றுச் சித்தியடைந்து பல ஆண்டுகளாகத் தொழில் இன்றி இருப்பதும், அரச தொழில்களில் இருப்போர் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பளம் போதாமல் வெளிநாடுகளுக்குச் செல்வதும், சாதாரண தரம், உயர் தரம் கற்றுச் சித்தியடையாதவர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று அதிக சம்பளம் பெறுவதும், அரச தொழிலின் நிச்சயமற்றதன்மை, நாட்டின் அரசியல் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பலர் தொழிலை இழந்திருப்பதும் பாடசாலைக் கல்வி தொடர்பான நம்பிக்கை ஈனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. வாழ்க்கைக்கு மாத்திரமன்றி தொழிலுக்கும் கல்வி கற்பது அவசியம் என்பது பற்றிய விழிப்புணர்வுகள் செய்யப்படாமையாலும் மாணவர் இடை விலகலுக்கும் தினசரி வரவு வீதம் குறைந்து கொண்டு சென்றமைக்கும் காரணமாக அமைந்தன என்பதனையும் இவ்வாய்வு உணர்த்தியது.
பாடசாலைகளின் பாடவிதான அமுலாக்கம் தொடர்பாக 25 வீதத்துக்கு மேற்பட்ட அதிபர்கள் தெளிவில்லாமல் இருப்பதனால் அவர்கள் தலைமைதாங்கும் பாடசாலைகளில் பாடவிதான அமுலாக்கம் பாலவீனமாக இருப்பதையும் ஆய்வின் மூலம் அறிய முடிந்தது. அத்தோடு மேலதிகாரிகள் அதிபர்களை அடிக்கடி அலுவலகத்துக்கு அழைப்பதனால் அவர்களில் பலர் அதைக் காரணமாகக் கொண்டு அன்றைய தினம் பாடசாலைக்குச் சமூகமளிக்காது இருக்கின்றனர். மாதத்தில் பல நாட்கள் அதிபர் பாடசாலையில் இலலாதிருப்பதும் குறையாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அதிகாரிகள், அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் பணியாற்றும் அதிபர், ஆசிரியர்களில் பலர் ஏதெச்சாதிகாரத்துடன் இயங்குவதையும் பலரும் சுட்டிக் காட்டினர். இது பல பாடசாலைகள் சீர்கெடுவதற்குக் காரணமாக அமைகின்றன.
அதிபர், அசிரியர்கள், அதிகாரிகள் பலரிடம் 21 ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான திறன்கள், இற்றைப்படுத்தல்கள் இல்லை எனவும் 65 வீதத்துக்கு மேற்பட்டவர்களிடம் போதனாவழித் தலைமைத்துவம்